பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

148 தம்பிரான் தோழர் கணைகொள் கண்ணப்ப னென்றிவர் பெற்ற காத லின்ஒரு ளாதரித் தடைந்தேன் திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும் செல்வத்தென்றிரு நின்றியூ ரானே.(3) என்பது இத்திருப்பதிகத்தின் மூன்றாவது திருப்பாடல். சேக்கிழார் பெருமான் குறிப்பிடுவது இப்பதிகத்தையே நின்றியூரினினின்றும் நீடுருக்கு1 எழுந்தருளுகின்றார் நம்பியாரூரர். இத்தலத்து எம்பெருமானை "ஊர்வதோர் விடை" (7.56) என்ற முதற்குறிப்புடைய பதிகம் பாடிப் போற்றி வணங்குகின்றார். ஊர்வதோர்விடை பொன்றுடை யானை யொண்ணுதற்றனிக் கண்ணுத லானைக் காரதார்கறை மாமிடற் றானைக் கருதலார்புர மூன்றெரித் தானை நீரில் வாளை வரால்குதி கொள்ளு நிறையுனற்கழனிச் செல்வ நீடூர்ப் பாருனார் பரவித் தொழநின்ற பரம னைப்பணி யாவிட லாமே.(1) என்பது திருப்பதிகத்தின் முதற் பாடல். செந்தமிழ்ப் நீடூர்ப் பெருமானிடம் விடை பெற்று திருப்புன் கூர்14 வருகின்றார். (இந்து இரண்டாம் முறை வருகை). இத்திருத் 12.பெ.பு: ஏயர்கோன்- 150 13.நீடூர்: இத்தவம் எழும்பூர்- விழுப்புரம் - மயிலாடு துறை இருப்பூர்தி வழியில் ஒரு நிலையம். நிலையத் திலிருந்து திருக்கோயில் ஒரு கல் தொலைவி லுள்ளது. 14. திருப்புன்கூர்-கட்டுரை-6 அடிக்குறிப்பு 7-6 காண்க. திருநாளைப் போவாருக்குத் (நந்தனாருக்குத்) தேர் நிலையிலிந்தே இறைவன் காட்சியளிக்கத் திரு இந்தி தேவரை விலகி இருக்கும்படிக் கட்டளையிட,