பக்கம்:தயா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ தயா இந்த மழையிலே மாட்டுக்கு ஜூரம் வந்துாடும், என்று விட்டான். கடைசியாக நான் மாட்டை விட்டுட்டு வர முடியாது. என்னால் முடிஞ்சுது வண்டியை எடுத்துகிட்டுப் போய் திருப்பிக் கொனாந்திடுங்க? அதுவும் நீங்க ரொம்பக் கேட்டுக்கறத்தாலே. பாவ தோஷத்துக்கு அஞ்சி, உங்களை நம்பிக் கொடுக்கறேன்.' உமா லக்ஷ்மியைத் தாங்கிக் கொண்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தாள். தெரு விளக்கு வெளிச்சம் நேரே லக்ஷ்மி முகத்தில் அடித்தது. உமா கட்டை விரலால் ரகைடியாய் இட்டிருந்த உதிர்விபூதி லக்ஷ்மி நெற்றியில் துலங்கிற்று. அவன் வண்டியை இழுத்துக் வருவதைக் கண்டதும் அந்த நேரத்திலும் உமாவின் இடக்குப் போகவில்லை. 'இதென்ன கூத்து? எத்தனை நாளாய் இந்த பார்ட் டைம் ஜாப்?' 'ஏறு ஏறு-’ அவர்கள் கிளம்புவதற்கென்றே காத்திருந்தாற் போல் மழை வலுக்க ஆரம்பித்துவிட்டது. ஜலம் முழங்கால் ஆழத் திற்கு ஓடிற்று, ஆகாயத்திலிருந்து பூமிமேல் எறிந்த ஈட்டிகள் போல் தெருவிளக்கில் தூறல்கள் பளபளத்தன. ஸல்பாகள் திறந்து கொண்ட இடத்தில் மழை வென்ளம் சுழித்தது. பகவானே, எதிலாவது நான் காலை விடாமல் இருக்கனுமே! கைகள் சட்டங்களைப் பிடித்துக்கொண்டிருந்தமையால். முகத்தின் மேல் வழியும் ஜலத்தை வழிந்தெறிய முடிய வில்லை. உதட்டிலிருந்து நக்கிக்கொண்ட ஜலம் நாக்கில் இனித்தது. கண்களை அடைத்த ஜலத்தில் விழிகள் நீந்தின, அந்த ஜலத்திரையில் மங்கின திருஷ்டியில், பூமியும் வானமும் ஒன்று சேர்ந்து ஒரு பிரம்மாண்டமான புஷ்பமாய் மலர்ந்து மெதுவிட்டுத் தோன்றிற்று. ஈரம் தோலுள் இறங்கி, சதையை ஊடுருவி, எலும்பை இெருப்பாய்க் காய்ச்சிற்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/70&oldid=886372" இலிருந்து மீள்விக்கப்பட்டது