பக்கம்:தரங்கிணி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

142

நடப்பதென்ருல், அவர்கள் பேச்சுக்கு நீங்கள் கட்டுப் படலாமா? அவர்கள் கட்டளைக்குக் கீழ்ப்படியலாமா? உங்கள் மன உணர்ச்சிக்கு, கருத்துக்கு மதிப்பு அளிக்காத வர்கள், உங்களைப் பெற்று வளர்த்த தாய் தந்தையாரா யிருந்தாலும், அவர்களே ஒரு பக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு, நீங்கள் உங்கள் விருப்பம் போல் காரியஞ் செய்ய வேண்டி யதுதான். உங்கள் விருப்பப்படி நடந்து, உங்கள் ஆசை யைப் பூர்த்தி செய்துகொள்ள வேணடியதுதான். உங்கள் ஆசாபாசங்களுக்குச் சிறிதும் மதிப்பளிக்காதவர்கள், உங்களுடைய வாழ்க்கை நலத்தில் மட்டும் கருத்துடைய வர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? யோசித்துப் பாருங்கள்... என்று சொன்னன்.

செளந்தரராஜன் சிந்தனையிலிருந்து மீளாமலே "அப்படியானல், என்ன செய்யலாம், ஜோஸப்? சொல் லேன்' என்று கேட்டான்.

தான் போட்ட புள்ளி தப்பவில்லை என்று தெரிந்து கொண்ட ஜோஸப், சிறிதும் தயங்காமல், பெற்ருேர் உற்ருேரை எதிர்பாராமல், நீங்கள் விரும்பிய பெண்ணைத் துணிந்து கலியாணஞ் செய்து கொள்ள வேண்டியது தான் உன்று யோசனை கூறினன்.

"அதற்கு எப்படி வழி, ஜோஸப்' ஒன்றுமறியாத குழந்தைபோல் கேட்டான் செளந்தரராஜன்.

ஜோஸ்ப், உடனே அவன் காதிலே மெல்ல என்னவோ ஒதின்ை. х

செளந்தரராஜன், முகமலர்ச்சியுற்றவய்ை, ஜோபைத் தன் இரு கரங்களாலும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு, ஜோஸ்ப். உன்னை என்னவோ என்று எண்ணிக்கொண் டிருந்தேன். நீ வயதில் என்னைவிடச் சிறியவனுயிருந்தாலும், உலகானுபவத்தில் மிகப் பெரியவன். அப்பா! நீ சொன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/143&oldid=1338559" இலிருந்து மீள்விக்கப்பட்டது