பக்கம்:தரங்கிணி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

I50

புன்னகை செய்த செல்லம்மாள், அவள் வலக்கரத்தை அன்பாகப் பற்றிக் கொண்டு நிமிர்ந்து நடக்கலானள். தரங்கிணி, நாணத்தோடு அவள் பின் நடந்தாள்.

கூடத்தின் நடுவில் நாற்காலியும் மேஜையும் போடப் பட்டிருந்தன. மேஜைமீது பல வண்ணச் சித்திர வேலைப் பாடு அமைந்த விரிப்பு ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அதன் நடுவே, சிறு பித்தளேப் பூந்தொட்டியொன்று வைக்கப்பட்டிருந்தது. இருபக்கத்தின் சுவர் ஒரங்களிலும் நாற்காலிகள், பல போடப்பட்டிருந்தது. தரையில் ஜமக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. சந்தோஷநாதம் பிள்ளையும், அவர் வயதை ஒத்த முதிய மனிதர்கள் இருவரும், மு ப் ப.து நா ற் ப து வயதானவர்கள் இரண்டொருவரும் அங்குக் காணப்பட்டனர். தங்கராஜ் அவர்களுக்குப் பருகப் பானங் கொடுத்துக்கொண்டிருந்: தான். டேவிட் குறுக்கும் நெடுக்கும் ஒடிக்கொண்டிருந்: தான். செல்லம்மாள் காதரீனுக்கு ஏதோ குறிப்புக் காட்டி விட்டுப் பின்கட்டுக்குப் போனுள்.

தன் மகளையும் தரங்கிணியையும் கண்டதும், சந்ேதாஷ் நாதம் பிள்ளை, "ஏன், காதரீன் இவ்வளவு நேரம் ? தரங்கிணியை உள்ளே அழைத்துக் கொண்டு போய், சீக்கிரம் சிங்காரித்துக் கொண்டு வா! அவர் வந்துவிடு வார் குறித்த நேரத்தில்... என்று சொன்னர். : இங்குள்ள சூழ்நிலையைப் பார்த்ததும், தரங்கிணிக்கு ஒன்றுமே புரியவில்லை. காதரீன் அவளைத் தன் அறைக்கு அழைத்துப் போனள். அவளுக்காகக் காத்திருந்தாற். போல், காதரீனுடன் தரங்ணியைக் கண்டதும், பாட்டும் சிரிப்பும் குபிரென ஒலிக்கலாயின. தரங்கிணி திடுக்கிட்டு நிமிர்ந்து நோக்கினள். தன் பள்ளித்தோழிகள் பலர் அங்கிருப்பதைக் கண்டு, அவள் வெட்கிப் போளுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/151&oldid=1338567" இலிருந்து மீள்விக்கப்பட்டது