பக்கம்:தரங்கிணி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16]

பின், சந்தோஷநாதம் பிள்ளை தரங்கிணி சார்பில் சாட்சிக் கையெழுத்துப் போட்டார். தம் உறவினர் ஒருவரையும் போடச் செய்தார். அவர் முன்னமே சொல்லி வைத்தபடி, செளந்தரராஜனுக்காக அங்கிருந்த இரு பெரியவர்கள் சாட்சிகளாகக் கையெழுத்து இட்டனர்.

இதனிடையே ஜோஸ்ப், விரைந்துபோய், காதரீன் அறையிலிருந்து இரு பெரிய ரோஜா மாலைகளே ஒரு வெள்ளித்தட்டில் கொண்டுவந்து, தன் தகப்பனரிடம் கொடுத்தான். அவர், அம் மலர்மாலைகளே ரிஜிஸ்டிராரிடம் தந்து, மணமக்களிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண் டார். அவர் அவ்வி தமே செளந்தரராஜன் கையிலும் தரங்கிணியின் கையிலும் தனித்தனியாக ரோஜா மாலை களைக் கொடுத்து, ஒருவருக்கொருவர் போட்டுக்கொள்ளச் சொன்னர். செளந்தரராஜன், அம்மாலையை வாங்கி இடது முழங்கையில் தாங்கிக்கொண்டு, தன் சட்டைப் பையில் வைத்திருந்த பொன்னலான தாலிச்சரடு ஒன்றை எடுத்து, முதலில் அதை மகிழ்ச்சி முகத்தில் பொங்கத் தரங்கிணி யின் கழுத்தில் அணிந்து, பின் ரோஜாமாலையை எடுத்துப் போட்டான். உடனே சாரதா தரங்கிணியைத் துண்டி, செளந்தரராஜன் கழுத்தில் ரோஜாமாலையைப் போடச் செய்தாள். உடனே அங்குள்ளவர்கள், தங்கள் கையில் கொடுக்கப்பட்டிருந்த உதிரிமலர்களே எடுத்து, மணமக்கள் மீது சொரிந்துவிட்டுக் கைகொட்டி மகிழ்ச்சி தெரிவித்து, வாழ்த்தொலி எழுப்பினர். -

இதே சமயத்தில், அவ்விதி முனையில் ஒரு விட்டில் நடந்துகொண்டிருந்த திருமணத்தில், தாலிகட்டும் சமயத் தில் வாசிக்கப்படும் நாதசுர ஓசையும், தவில் சப்தமும் பல மாக்க் கேட்டன. ,

இதற்குள் சந்தோஷநாதம் பிள்ளை ரிஜிஸ்டிராருக்குச் செலுத்தவேண்டிய கட்டணங்களைச் செலுத்தி, பூ பழம்,

த.--11 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/162&oldid=575357" இலிருந்து மீள்விக்கப்பட்டது