பக்கம்:தரங்கிணி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

85

லக்ஷ்மி பாட்டி தரங்கிணியின் கலியாணப் பேச்சை எடுத்ததுமே எழுந்துபோகத் துடித்துக் கொண்டிருந்த செளந்தரம், இச்சமயம் சற்று இடைவெளி கிடைத்ததும், பின்னுவதை நிறுத்திச் சடக்கென எழுந்து, "நான் போய் வருகிறேன், மாமி! தரங்கம் வந்தால், நான் வந்து கேட்டு விட்டுப் போனதாகச் சொல்லுங்கள். மறுபடியும் சந்தர்ப்பம் வாய்த்தால் மற்ருெரு நாள் வருகிறேன். தரங்கம் அந்தப் பக்கம் வந்தால், என்னை வந்து பார்த்து விட்டுப் போகச் சொல்லுங்கள்; என்ன? என்று சொல்லி விட்டு, எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு போனள், - -

செளந்தரம் தலை மறைந்ததுமே, அம்புஜம் காமாட்சி யம்மாளைப் பார்த்துச் சொன்னுள்: மாமி! அப்படித்தான் தரங்கத்தை அனுப்பிவைக்கப் போகிறீர்கள், செளந்தரம் சொல்லி விட்டுப் போளுளே என்று, பொதுவாக, வயதுக்கு வந்துவிட்ட பெண்களைக் கண்ணுேடு பிறந்த காவேரியா யிருந்தாலும் மற்றவர்களுடைய வீட்டுக்குப் போக வைக்கக்கூடாது. செளந்தரம் வீட்டில் கலியான மாகாத அவள் சகோதரர்கள் இருக்கிருர்கள். அந்தப் பிள்ளைகளெல்லாம் ஒரு மாதிரி என்று:சொல்லுகிருர்கள். அத்துடன், செளந்தரமும் சாமனியப்பட்டவள் என்று நினைத்து விடாதீர்கள். இவ்வளவு இளவயதிலேயே இவளுக்குள்ள ஆணவஞ் சொல்லிமுடியாது. தான் பருவம் அடைந்த இரண்டு மூன்று வருஷங்களுக்குள் தனக்குக் க்வியாணமாய் விட்டது; அதுவும் நல்ல இடம் கிடைத்து விட்டது என்ற நினைப்பையும் மமதையையும், அவளுடைய ஒவ்வொரு சொல்லிலும் நடையிலும் நீங்கள் கவனித்திருக் கலாமே! தரங்கத்துக்கு இன்னும் கலியாணம் ஆகாதது அவளுக்கு உள்ளுர இளக்காரந்தான்! அதைச் சொல்லா மல் சொல்லிக் காட்டத்தான் அவுள் வயிற்றைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/86&oldid=1338502" இலிருந்து மீள்விக்கப்பட்டது