உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தராசு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

கிறேன். நான் கேட்க வந்த விஷயத்துக்கு விடை சொல்லு” என்றான்.

அதற்குத் தராசு:— “தம்பி, நான் உனக்கு பயந்து ஒன்றையும் மறைத்துப் பேசவில்லை. நீ கேட்க வந்த விஷயத்துக்கு மறுமொழி ஏற்கெனவே சொல்லியாய்விட்டது. சிரித்தது உன்னைக் குறித்தே தான். அதில் சந்தேகமில்லை“ என்றது.

“காரணமென்ன?“ என்று வாஸுதேவன் சினத்தோடு விசாரித்தான்.

“தேசத்துக்குச் சண்டை போடக்கூடிய வீரனாக உன்னைப் பார்க்கும்போது தோன்றவில்லை. சண்டையிலே சேர்கிறவன் இத்தனை ஆராய்ச்சியும், பரியாலோசனையும், கன்ஸல்டேஷனும் நடத்தமாட்டான். படீலென்று போய்ச் சேர்ந்துவிடுவான்“ என்று தராசு சொல்லிற்று.

“என்னை நீ போலீஸ்காரனென்று நினைக்கிறாயா?“ என்று வாஸுதேவன் கேட்டான்.

“நான் அப்படிச் சொல்லவில்லை“ என்றது தராசு.

“நான் போய் வரலாமா?“ என்று வாஸுதேவன் கேட்டான்.

“போய்வா“ என்றது தராசு.

அவன் போன பிறகு தராசு என்னிடம் சொல்லுகிறது:— “இவன் உளவு பார்க்க வந்தவன், சந்தேகமில்லை. பட்டாளத்தில் சேர்ந்து தேசத்தைக் காப்பாற்றக்கூடிய யோக்யதை யுடையவன் இத்தனை வீண் பேச்சுப் பேசமாட்டான். அவனுக்கு இத்தனை கர்வமிராது“

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/27&oldid=1770178" இலிருந்து மீள்விக்கப்பட்டது