இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தராசு
வக்கீல்:— “நீ சொல்லும் மருந்தெல்லாம் ஒரு மாதிரி வினோதமாக இருக்கிறதே!”
தராசு:— “வேறு கேள்வியுண்டா?“
வக்கீல்:— “இல்லை. தராசே, நமஸ்காரம், நான் போய் வருகிறேன்.“
திரும்பிப் போகும்போது வக்கீல் முகமலர்ச்சியுடன் போனார். தராசு அவரைக் காட்டி, “இன்னும் ஒரு வருஷத்தில் இவர் மனிதனாய் விடுவார்“ என்று சொல்லிற்று.
32