இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தராசு
“பயனற்றதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்லும்” என்றேன்.
“சிறையூர் ஜமீந்தார் தர்ம ப்ரஸங்கம் என்றேன்.
“அதென்ன கதை?“ என்று சேட் கேட்டார்.
“தென்னாட்டிலே சிறையூர் என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கே பழைய காலத்தில் க்ஷத்ரியராக இருந்து இப்போது மாட்சிமை குறைந்து போயிருக்கும் மறக்குலத்திலே பழம்புலித் தேவர் என்ற ஒரு ஜமீன்தார் இருக்கிறார். அவர் சிறிது காலமாக தர்மோபதேசம் செய்யத் தொடங்கி, ‘மூச்சு விடத் தகுதியுள்ளவர் யார், தகுதியில்லாதவர் யார்? பல்நகம் தரிக்கத் தக்கோர் யார், தகாதோர் யார்?’ என்ற விஷயங்களைப் பற்றி உபந்யாசங்கள் செய்து வருகிறார். இதுபோன்ற வீண் சங்கதிகளை நமது தராசு கவனிக்க மாட்டாது“ என்றேன்.
34