உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தராசு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

பிறகு ஜிந்தாமியான்:— “ஆண்களுக்கு விடுதலையைப் பற்றிப் பேசலாமோ?”

தராசு:— ”பேசலாம்.”

"ஸேட்:— ”முயற்சி கைகூடுமா?”

தராசு:— ”தொடங்கு முன்னே எந்த முயற்சியும் கைகூடுமோ கூடாதா என்று ஜோதிஷம் பார்ப்பதிலே பயனில்லை; தொடங்கி நடத்தினால் பிறகு தெரியும்.”

சிறிது நேரம் சும்மாயிருந்துவிட்டு, ஜிந்தாமியான் மறுபடி பின்வரும் கேள்வி கேட்டார்:—

”வருகிறேனென்று சொல்லி வாராதவர்களையும் தருகிறேனென்று சொல்லித் தாராதவர்களையும் என்ன செய்யலாம்?”

தராசு, ”சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி” என்றது.

”விளக்கிச் சொல்லு” என்று ஸேட் வற்புறுத்தினார்.

தராசு சொல்வதாயிற்று:— தருகிறேனென்று சொல்லும்போதே பின்னிட்டுத் தம்மால் கொடுக்க முடியாதென்பதை அறிந்துகொண்டு சொல்வோர் புழுக்கள். அவர்களைப் படுக்கவைத்துக் கை கால்களைக் கட்டி மேலே ஒரு மூட்டை கட்டெறும்பைக் கொட்டிக் கடிக்கவிட வேண்டும். தருகிறேனென்று சொல்லும்போது உண்மையாகவே கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் சொல்லிவிட்டுப் பின்பு

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/37&oldid=1770544" இலிருந்து மீள்விக்கப்பட்டது