பக்கம்:தரும தீபிகை 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வா க் கு ந ய ம் 133

இது, உயர்வும் தாழ்வும் உரையால் உறும் என்கின்றது.

ஒர்ந்து=முன்னும் பின்னும் ஆராய்ந்து அறிந்து.

உள்ளத்தில் ஆய்ந்து தெளிந்த எண்ணங்களை வெளியே மொழியுங்கால் இனிமையாகச் சொல்லின் அச்சொல்லாளரை எல்லாரும் உவந்து புகழ்வர் ; அவரும் சிறந்த பலன்களை அடைந்த உயர்ந்து கிகழ்வர் ஆதலால் மனிதர் உயர்ச்சிக்கு இனிய சொல் எதுவாய் வந்தது.

ஒர்தல் உள்ளக்கில் கிகழ்வது ; இனிது மொழிதல் வாயில் இயல்வது. பின்னதற்கு முன்னது நன்னயம் தருவது ஆகலின் அது முதலில் கின்றது.

ஒர்ன்து இனிய சொல்வது உயர்வு என்றமையால், ஒாாமல் வன்சொல் மொழிவது இழிவு என்பது பெறப்பட்டது.

' உணர்வு இன்றி இழிவே சாற்றுவர் கீழோர்' என்றது மொழி வழியே இழி மக்கள் இயல்பு தெளி வுறுத்திய படி.

இந்த மேல் கீழ்களுடைய நிலைமைகளைத் தெளிவாக

உணர்ந்து கொள்ளும்படி யாழும் பறையும் உவமைகளாய் வர்தன

உயர்ந்தோர்க்கு யாழும், ழோர்க்குப் பறையும் ஒப்பாம். இவ் வுவமக் குறிப்பால் பொருள்களின் இயல்புகளை துணுகி யுணர்ந்து நிலை தெளிந்து கொள்க. யாழ்=வினை.

யாழ், சாகலங்கள் அமைந்தது ; கலைஞானம் கனிந்தது ; மங்கலமான இனிய சுவையுடையது.

பறை, ஒசை கிறை சோாதது ; உணர்வு முறை பற்றது ; அமங்கலமான இன்னு ஒலியது. o

மேலோர் சொல், ஒழுங்கு அமைந்து உணர்வு நலம் கமழ்ந்து இனிமைசாக்து வருகலால் அதற்கு யாழ் உவமையாயது; கீழோர் சொல், ஒர் ஒழுங்குமின்றி, கண்டபடி காைந்து, கடுமையாய் ஒலித்தலால் பறை என நேர்ந்தது.

பறை ஒலிபோல் பாழ்வாய் திறந்து பழி மொழிகள் பேசி இழிவுருதே ; கிறையறிவோடு கினைந்து நோக்கி இனிது பேசி

உயர்க என்பதாம். உரையாடும் திறம் உணர்த்திய படி யிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/140&oldid=1324712" இலிருந்து மீள்விக்கப்பட்டது