பக்கம்:தரும தீபிகை 1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= *

136 த ரும தி பி கை

பொருள், வலி, குலம் முதலியவற்றில் தாழ்ந்தவர் என இளிவாக எண்ணி எவரையும் எளிதா எசலாகாது. எசின், வாய்க்கு மாசாம் ; அம் மாசு மருவாமல் வாக்கைப் பேணுக.

எளியரை இகழ்ந்து வைதவன் பின்பு எளியய்ை இழிந்து பலாால் வையப்படுவன். இது தெய்வ கியதி ; இதனை ஐயுருது உய்திபெறுக. எளியர்பால் இதம்புகலின் எல்லாரும் புகழ்ந்து மகிழ்வர் ஆதலால் ஒளி வளரும் என அவ்வூதியம் தெரியவந்தது. ஒளி = கீர்த்தி. ஒளி வளம மொழி அருள்க.

தெய்வ அருள் சேரும், திருநலங்கள் வரும் ” என்றது ஏழைகளுக்கு ஆதரவு செய்யின் புண்ணியமாம் ; ஆகவே கரும விளைவாகிய ஆக்கங்கள் பல உரியவனே நோக்கி வருவனவாயின.

கடவுளுக்கு ஏழை பங்களன் என ஒரு பெயர். கன் பங் கில் பணி செய்வோர்க்கு அவனது அருள் உரிமையாய் விாைவில் வரும். அவ்வாவு இருமையிலும் இன்பம் கரும் என்க.

இனிய மொழியால் புகழும், இாங்கியருள்வதால் புண்ணிய மும் விளையும் , அரிய பல பொருள்களும் பெருகும் ; பாமன் அருளும் கிடைக்கும் என்பதாம்.

ஒருவன் சொல்லும் செயலும் கல்லனவாயின் அவன்பால் எல்லா கலங்களும் எளிதில் வந்து அடையும் என்பது கருத்து.

120. பூவுள் மனம்தேன் பொருந்தி மிளிர்தல்போல்

நாவுளுயர் மெய்யினிமை கண்ணினுல்-பூவிலமர் செய்ய திருவின் செழுமனே யாய்த் தேசுயர்ந்து வையம் வழுத்த வரும். (ιδ)

இ-ள் மணமும் தேனும் மருவிப் பூ விளங்குதல்போல் மெய்யும் இன்சொல்லும் மேவி னா அமர்ந்தால் அது திருமகளுக்கு வாச மாய் அரிய மகிமை வாய்ந்து உலகம் கொழி உயர்த்து விளங்கும் என்ற வாது.

இது, மெய்யுடைய நா தெய்வ கிலையம் என்கின்றது.

பூ மணம் தேன் என்பன நா, மெய், இன்சொல்களுக்கு முறையே உவமைகளாயின. பூவுக்கு மனம் போல நாவுக்கு மெய் என்றமையால் அதன் கீர்மையும் கிலைமையும் நன்கு தெரியலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/143&oldid=1324715" இலிருந்து மீள்விக்கப்பட்டது