பக்கம்:தரும தீபிகை 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 த ரும தீ பி. கை

நெஞ்சம் காவாய் நேரே இனிது பேசி மறைவாகப் போய்ப் புறங்கூறும் வஞ்சமகன் மிகவும் அஞ்சத்தக்கவன்; நஞ்சனேய அவனது வெஞ்செயல் தெளிய வஞ்சன் வெங்கோள் என வந்தது.

மெல்லிய வாயில் கொள்ளித்தேள் கொட்டியது போல் நல்ல செவிகளில் நவைச் சொல் உகுத்துப் பொல்லாத கோளர் புலைக் கேடு செய்வர். வாயைக் குறித்துக் காட்டியது பேசுகின்ற அகன் பெருமையும் இனிமையும் கருதி உாைநிலையின் உயர் நலம் உணா வந்தது. சேக்கோள் பட்ட செவி நாசப்படும் என்க.

பட்டிகள்=கள்ளக்கனமாய் நடிக்கும் கபடிகள்.

கோளனுக்கு நெஞ்சில் நேர்மை ஆண்மை முதலிய மேன்மைக் குணங்கள் யாதும் இராது; கீழ்மையான பேடித்தனமே பெருகி யிருக்கும்; அந்த ஈன மகனே அணுகவிடின் எகாவது ஒரு பழி மொழியைக்கூறி உள் ளத்தையும் உயிாையும் பாழ்படுத்தி விடுவன் ஆதலால் அப்பழிகாானை எவ்வழியும் பாராகே என எச்சரிக்க நேர்ந்தது.

பட்டிகளைக் காணல் பழி என்ற கல்ை அவரை ஒட்டின் உளவாம் இழவுகள் உணரலாகும். கண்ணுக்கு எட்டினல் காகில் சொல் விடத்தைக் கொட்டிக் கடுங் கேடு விளைப்பர்; காணுமல் நெடுங் தாக்கே ஒதுங்கி உய்க. வஞ்சக் கோளர் நஞ்சினும் தீயர்; அஞ்சி நீங்குக என்பது கருத்து.

149, நாக்கில் சுணையின்றி நாளும் துயர்கூரப்

போக்குரையே கூறிப் புலையாடும்

கண்டபயன் ஒன்றுமின்றே காண்பவெலாம் கிங்தைபழி கொண்டவிதம் என்ைே கொடிது. (க)

திய கோளர் பிறரைக் குறித்து நாளும் . பழிமொழி கூறி

வினே புலையாடுகின்ருர் , அதனுல் ஒரு நலமும் கண்டிலர்: பழி

யும் கிங்தையுமே எவ்வழியும் அடைகின்ருர் என்றவாறு.

இது, கோளின் கொடு விளைவு கூறுகின்றது.

இக்கோளர்

நாக்கில் சுனே இன்றி என்றது ஈனமான பழிமொழிகளைப் பேசுகின்ற அதன் இழிநிலை கருதி. சுணை =உணர்ச்சி, சுபனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/179&oldid=1324753" இலிருந்து மீள்விக்கப்பட்டது