பக்கம்:தரும தீபிகை 1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 த ரு ம தீ பி. கை.

_* மக்களை மயக்.ெ நிற்றலால் மாயம் பயிலும் அயல் மொழி' என அதன் இயல் தெளிய வந்தது.

தாய் எனக் கழுவிக் கனக்கு உயிர்க்கேடு செய்ய வங்க பே யைக் கண்ணபிரான் ஒழித்ததுபோல் இம் மண்ணவர் உண் மயக் கம் ஒழிந்து கண் விழிக்க வேண்டும்.

அயல் மொழியில் மயலுழந்து படாதே; உரிமையான உனது இயல் மொழியை உறுதியுடன் நயன் உணர்ந்த பயிலுக. அப்பயிற்சி உண்மையான உயர்ச்சி நலங்களை உகவியருளும்.

176. தந்தம் மொழியில் தலைமைப் புலமைகொண்டு

வந்த மொழிபயிலல் மாண்பாகும்-சொந்தமொழி முந்த உணராமல் முண்டி அயலோடல் அங்த கமே அன்ருே அது. (சு)

தமக்கு உரிய தாய் மொழியில் தலைமையான புலமை அடைந்தபின் அயல் மொழியில் பயிலல் நலமாம்; அங்கனம் சொந்தமானதை முந்துறப் பயிலாமல் வேற்று மொழியை விழைந்து ஒடல் இழிந்த மருளாம் என்றவாறு.

தம் தம் என்றது மக்கள் இனங்களைச் சுட்டியது. உலகில் பல நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டினரும் கனித் தனியே தமக்கு என உரிய மொழியை வழக்கமாய்ப் பேசி வருகின்றனர். பழக்கமான சுயமொழியில் அம் முன்னேர்களுடைய எண்ணங் களும் அனுபவங்களும் சரிக்கிாங்களும் நூல்களாய் வெளி வங் துள்ளன. சொந்த மொழியாளருக்கு அங் நூல்கள் எளிதாகவும் இனிமையாகவும் தெளிவாம். ஆகவே அக்கக் கல்வியறிவு வேறு எந்த மொழி நூல்களையும் எளிதில் அறிவதற்கு வழியாய் ஒளி செய்து அருளும் ஆதலால் காய்பொழிப் பயிற்சி ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளுறுதியாய் உயர்ச்சி புரிகின்றது.

சுயமொழி உணர்வை முதலில் பெற்று அயல்மொழி பயில்க. அப்பயிற்சி ஒளியுற்ற விழிபோல் எகையும் தெளிவாக விரைந்து கண்டு உயர்ந்து கொள்ள இனி காய் உதவுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/213&oldid=1324790" இலிருந்து மீள்விக்கப்பட்டது