பக்கம்:தரும தீபிகை 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. நூ ல். 24 L.

என்றும் இன்பம் செய்யும் என்றது வருகின்ற சந்ததிக ளுக்கு எல்லாம் அறிவு நலங்களை உதவி ஒரு சிறிதும் குன்ருமல் என்றும் நிலையாக கிலேத்துவரும் அதன் கிலைமை தெரிய வந்தது.

194. உள்ளக் கவலை ஒழியும் உயரின்ப

வெள்ளம் பெருகி விரியுமே-தெள்ளிய நூலொன்று கையேந்தி நோக்கின் அதன்துணை போலொன்றிங் குண்டோ புகல். (ச)

இ-ள். தெளிந்த அால் ஒன்று கை ஏந்தி நோக்கின் உள்ளக்கவலை ஒழியும்; உயர்ந்த இன்பங்கள் பெருகி விரியும்; அங்,நூல் போல் உயிர்க்கு உற்றதுணே வேறு யாதும் இல்லை என்றவாறு.

தெள்ளிய நால் என்றது கருத்துக்கள் தெளிவாக விளங்கி யுள்ள இனிய தாலை, தன்னைப் பயில்கின்றவர்க்கு உள்ளத் தெளி வும் உணர்வினிமையும் உதவ வல்லது என்க.

படிக்கின்ற நூல் இப்படி இருக்கவேண்டும் என்றபடி யிது.

நல்ல நூலைப் படிக்கும்பொழுது உள்ள ம் அதில் ஊடுருவிப் புகுந்து பொருள் நயங்களை உவந்து நுகர்தலால் உற்றிருந்த கவலை கள் முற்றும் ஒழித்து போகின்றன. விளக்குப் புக இருள் மாய்க் தது போல் கல்வி நூல் புகவே கவலை மாய்கின்றது. கவலையை முதலில் குறித்தது மனித வாழ்க்கையின் கிலைமை தெளிய. அரசர் முதலாயினோது வாழ்க்கை வாலாறுகளும், வினை விளைவு களும், விகி கியமங்களும், உலக அனுபவங்களும், தெய்வ அருள் களும், சீரிய அறிவுகளும் ஒவிய உருவங்களாய் நூல்களில் உலாவி வருதலால் அவை உணர்வுக்கு இனிமையும், உள்ளத்திற்கு ஆறுத லும், உயிர்க்கு உறுதியும் உதவி யருள்கின்றன.

உலகப் பொருள்களில் விளையும் பொறியின்பங்களைப் போல் இழித்துபடாமல் துல் நுகர்ச்சி உணர்வின் சுவையாய் உயர்ந்து பொங்குதலால் உயர் இன்பம் என வந்தது.

வெள்ளம் என்றது அங்க இன்பத்தின் எல்லே தெரிய,

நூலை நோக்கின், கவலை ஒழியும்; இன்பம் விளையும்; என்ற மையால் அதன் பண்பும் பயனும் நன்கு புலம்ை.

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/248&oldid=1324825" இலிருந்து மீள்விக்கப்பட்டது