பக்கம்:தரும தீபிகை 1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தொன்ரும் அதிகாரம் கவி.

அஃதாவது கவியினது தன்மை. சிறந்த காவியங்களும், உயாந்த திேகளும், அரிய கருத்துக்களும் செய்யுள் வடிவிலேயே செழித்து வருகின்றன. உசையினும் பாட்டே பல வகையிலும் உயர்ந்தது. இனிய ஒசையும் கனிவும் வாய்ந்து அழகு சாத்து அறிவு நலம் பொதிந்துள்ள கவிகளின் தொகுதிகளே நால்களாய் வெளி வருதலால் இது நூலின் பின் வைக்கப்பட்டது.

2011 கண்காணு மாந்தரையும் காணுத வேந்தரையும்

விண்கா னரிய விதங்களையும்-மண்கான மாட்சி களையும் மதிமுன் இனிதாகக் காட்சி அருளும் கவி. - (க)

இ-ள் கண் எ கிரே காணுக மக்களையும், கருதாக அாசரையும், அரிய அதிசயங்களையும், பெரிய மாட்சிகளையும் நம் மனக் கண் முன்னே கவிகள் கொண்டுவந்து இனிமையாகக் காட்டி இன்பம் அருள் கின்றன என்றவாறு.

- H

இது, கவி காட்டும் காட்சிகளை உண்ர்த்துகின்றது.

மனிதன் நேரே கண்ட பொருள்களை மாத்திாம் காண்கின் முன் ; காணு கன பலகோடி யுள்ளன : அளவிடலசியபடி விரிந்து பாந்து மறைந்து போயுள்ள அவற்றுள் சிறந்தனவற்றை அழகா கப் புனைந்து விளக்கி உலகம் கண்டு மகிழ இனிதாகக் கொண்டு வந்து தந்து பாடல்கள் ஆடல் புரிந்து வருகின்றன.

பாட்டு, பா, செய்யுள், கவி என்பன ஒரு பொருள் சொற்கள்.

பல கலைகளையும் பயின்று தலைமையான புலமைவாய்ந்த கவிஞன் அறிவு நலம் கனிய இனிமையாகப் புனேத்து அருள்வது கவி என வந்தது. கவன க் கால் கவிந்து பிறந்தது என்பதாம்.

பாடப்படுவது பாட்டு செய்யப்படுவது செய்யுள் என்க.

மனிதர் பேசி வருகின்ற மொழிகளில் நூல்கள் பல எழுத் துள்ளன ; அவை அங்க அந்த நாட்டுப் புலவர் பெருமான்களால் செய்யப்பட்டன. கலை அறிவால் விளைந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/258&oldid=1324835" இலிருந்து மீள்விக்கப்பட்டது