பக்கம்:தரும தீபிகை 1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264. த ரு ம தீ பி. கை.

செல்வத்தை நீ தேடி அலையாகே ; கருமம் உடையய்ை இரு ; அது உன்னே விழைந்து வலிய வந்து சேரும் என்பது குறிப்பு. பொருளின் இயல்பையும் அறத்தின் நிலையையும் துணித்து நோக்கி மனிதன் உறுதி கலம்பெற இது உணர்த்தி யிருக்கிறது. உணர்வு நலம் உவகையாய் உய்தி புரிகின்றது.

வைகல் தோறும் இன்பமும் இளமையும் எய்கனே நிழலில் கழியும் இவ்வுலகத்து. (நற்றினே) இது, கிலேயாமையை கினேவுறத்தியது. வில்லில் இருந்து விடுபட்ட கணே குறியை நோக்கிப் பாயுங்கால் அதன் நிழல் எவ் வளவு விாைவில் கழிகின்றதோ, அவ்வளவு விாைவில் உன் இள மையும் வாழ்வும் ஒழிகின்றன ; இவ்வுண்மையை உணர்ந்து உயிர்க்கு உறுதியை விாைந்து செய்துகொள்க என்பதாம்.

இழிந்த மாக்களோடு இன்பம் ஆர்தலின் ". உயர்ந்த மக்களோடு உறுபகை இனிது. (பெருங்கதை) இது அம்பர்களுடன் எவ்வழியும் கூடாதே என்கின்றது.

பேரளுர் இடும்பை எல்லாம் பிளந்திடும், பிறப்பு நீக்கும். ஆரமிர்து அரிதில் பெற்ரும் அதன் பயன் கோடல்தேற்ரும்; ஒரும் ஐம்பொறியும் ஒம்பி உளபகல் கழிந்த பின்றைக் கூரெரி கவரும் போழ்தில் கூடுமோ குறித்த வெல்லாம் ?

(சிந்தாமணி) மனிதப் பிறவி அருமை யுடையது ; அமிர்தம் அனேயது ; துயாங்களே நீக்கவல்லது ; அத்தகைய உயர் பிறப்பு அடைந்தும் உயிர்க்கு உறுதி புரியாமல் ஐம்பொறி இன் பங்களை அவாவி அலைகின்ரு ய் ! இறுதியில் 虏 இறந்து படுங்கால் பெறுவது என்னம்? அதனை உணர்ந்து பார் என இஃது உணர்த்தி யுள்ளது. அறங்காட்டின் இருசெவிமீது அழற்காட்டி குற்போலும் அலகை வாழும் புறங்காட்டிற்கு ஒப்பதும் இப் புறங்காடே ; வேறுண்டோ புறம்பு கூற.

(அஞ்ளுவதைப் பாணி) தரும தெறி கூறின் அதனே உரிமையுட்ன் உவந்து கேளா மல் இகழ்ந்து போகின்ற மனிதப் பேய்கள் வாழ்கின்ற நாடே பாழான பெரிய சுடுகாடாம். புறங் காடு=ஊரின் புறத்தே இருப்பது செக்க பிணங்களே வைத்து எரிக்கும் இடத்தைக் குறித்தது. அது இடுகாடு, சுடுகாடு என இருவகைப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/271&oldid=1324848" இலிருந்து மீள்விக்கப்பட்டது