பக்கம்:தரும தீபிகை 1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 த ரும தீ பி ைக

வது கருமமேயாம் ; அதனை மருவினவன் இருமையும் பெருமை அடைவன் ஆதலால் அதன் இயல்பு தெரிய உயர்வு வந்தது.

உரிமையான உறுதித் தொழிலைப் பற்றின் உயர்வாம் ; சிறுமையான இரவுத் தொழிலை நாடின் இழிவாம்.

உணர்வு நலம் கனிக்க நீ உணவுக்காக உணர்வில்லாதாரிடம் போதல் ஞான சூனியமான ஒர் ஈனமேயாம்.

கல்வி யருமை தெரிந்து இவர் வாப்பெற்ருேமே ' என்று உவந்து உபசரித்து விழைந்து ஆதரிக்கும் உயர்க்க உத்கமச் செல்வர்களிடம் போனல் அத்துணேப் பிழை நோாது ; புலமை நலம் அறியாத புல்லிய செல்வரிடம் செல்லின் பொல்லாத் துயா மாம் ஆதலால், உணர்விலர்பால் பேர்தல் பெரிதும் பிழை ' என வந்தது. வழுவில் விழுவது வாழ்வாகாது.

தரும கெறி கழுவிப் பெருமித நிலையில் யாண்டும் போா திருக்கவேண்டிய நீ அருமையறியாரிடம் போய்ச் சிறுமை அடை யலாமா? அந்த அவமான நிலைக்கு ஒர் உவமானம் உண்டா ? உன்

கிலைமையை உணர்ந்து உயிர் மாணம் பேணுக.

தேக யாத்திரைக்கு வேண்டிய வசதிகளை நீயே முயன்று செய்துகொள் ; யாண்டும் யாரிடமும் யாசகத்தை வேண்டாதே.

236. எள் என்னும் முன்னமே எண்ணெயா கின்றளந்த

வள்ளியோர் அன்றிருந்த வண்ணத்தால்-தெள்ளியோர் தண்டிகைமேல் ஊர்ந்தார் தனியாட்சி யேபுரிந்தார் உண்டியுமின் றுண்டோவுரை. (+)

இ-ள் பண்டு கல்வியாளரை உரிமையுடன் போற்றிய வள்ளல்கள் பலர் இருந்தமையால் புலவர்கள் சிவிகைகளில் ஊர்ந்தார் ; தேச ஆட்சிகள் புரிந்தார் ; மன்னவர் குரவராய் மன்னி கின்றனர்; இன்று உண்ணவும் உணவு உண்டோ ? என்றவாறு.

கல்வி யறிவு தெளிந்துள்ளமையால் புலவர் தெள்ளியோர் என வந்தார். வள்ளியோர் என்றது கொடையாளிகளை.

உள்ளன எல்லாம் உவந்து உதவிய வள்ளல்கள் எல்லார்க் கும் கொடுத்து வந்தாலும் புலவர்களை எதிர்கொண்டு கண்டு போற்றி வழங்கின்மையால் அவர் புகழை இவர் தாற்றி கின்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/303&oldid=1324880" இலிருந்து மீள்விக்கப்பட்டது