பக்கம்:தரும தீபிகை 1.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邻44 த ரும தீ பி. கை.

ஒருவனது மனே வாழ்க்கை பலர்க்கும் உபகார்மாய்ச் சிறந்த குறிக்கோளுடன் உயர்த்து வர வேண்டும்; அவ்வாறு வரின் எவ் வாற்ருனும் அவன் திவ்விய கிலேமையை அடைந்து திகழ்வான்.

ஆள்வானே உயர்வான் என்ற தல்ை ஆளாதவன் இழிவான் என்பது பெறப் பட்டது. மனிதன் செய்வினையால் சிறந்து கிகழ் கின்ருன். அச் செயல் வழுவின் அவன் உயர்வு அழிகின்ருன்.

உரிமையை உணர்ந்து உற்ற கடமையைச் செய்யாதவன் வேறு வழிகளில் வெற்றியாளனுய்த் தோன்றிலுைம் அவனே உலகம் குற்றமே கூறும்.

"இல்லாளல் செய்யா இயல்பின்ை எவ்வளவு

வல்லாள னுக வளர்ந்தாலும்-தொல்லுலகம்

எள்ளி அவனே இகழும் இழிபழியை அள்ளி விழுவன் அயர்ந்து.

என்னும் இது ஈண்டு உள்ளி உணர்ந்து கொள்ள வுரியது.

இல் ஆளல் செய்யான் என்பதில் இரு பொருள்கள் மருவி யுள்ளன. தன் மனைவியை மாண்புடன் ஆளாதவன்; மனே வாழ்க் கையை மாட்சியுறப் பேணுதவன் எனக் காணலாகும்.

அகத்தில் உள்ளதை அன்புடன் போற்றி ஆதரியாதவன் புறத்தில் பல காரியங்களுக்குத் தலைவய்ைப் பிலுக்கித் திரிக் தாலும் அவன் பிழைபாடுடையய்ை இழிவே அடைவான்.

வீட்டை ஆளத் தெரியாதவன் வெளியே மேட்டிமைகள் காட்டி காட்டில் கோட்டி கொண்டாடி வருதல் பெரிய கோட்டிக் தனமே யாகும்; உன்னைத் தாாகமாக நம்பியுள்ள குடியை முன்பு அன்பு செய்து பேணுக; பின்பு ஊருக்கும் உலகுக்கும் உரிய கடமைகளைச் செய்க. . * ---

தெய்வம் நம் கையில் கொடுத்த காரியத்தைக் கண்ணும் கருத்துமாய்ச் செய்துவரின் எண்ணி எடுத்த புண்ணியங்கள் யாவும் இனிது செய்த படியாம். உரியது புரிய அரியன அமையும்.

தன்னேக் கருதியுள்ள குடும்பத்தை இடும்பைகள் யாதும் அணுகாதபடி உரிமையுடன் போற்றுக ; உலக நலன்களையும் கவனித்து உயர்வினை ஆற்றுக என்பது கருத்து.

--- *-* --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/351&oldid=1324928" இலிருந்து மீள்விக்கப்பட்டது