பக்கம்:தரும தீபிகை 1.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. க ட ன். 361

அவனது குடியின் மேன்மை குன்றும்; கலை முறையாகத் தலை சிறந்து வந்த குடி புலையான கடல்ை கிலே தாழ்கின்றது. அத் தாழ்வில் வீழ்ந்து ஒழியாமல் வாழ்வை ஒர்ந்து கொள்ளுக.

'கெடுமாறே எல்லாம் இயற்றும்' என்றது பலவகையான அல்லல்களையும் ,அவமானங்களையும் ஒல்லையில் வளர்த்து கல்ல குடி வாழ்க்கையை நாசப்படுத்தி விடும் ஆதலால் அந்த மோசம் தெரிய வந்தது. காச கிலையமான சேக் கடனை யாண்டும் தீண்டாதே; கொடிய குடி கேடகைக் கருதி எவ்வழியும் அதனை அருகு அனுகாவகை உறுதி செய்து ஒழுகுக.

-=

359. வறுமை வருத்தின் வருங்தி முயன்று

பொறுமை யொடுபொழுது போக்க-சிறுமைமிகச் செய்யும் கடனருகே சேரற்க சேர்ந்தாயேல் ஐயோ கெடுவை அறி. i (சு)

இ. ள்.

பொருள் இல்லையானல் வருங்கி முயன்று இருக்க அளவில் அமைதியாய்த் திருக்கி வாழ்க, சிறுமை மிகச் செய்கின்ற கடன் அருகே செல்லாதே; சென்ருல் அந்தோ! அழித்து படுவாய்,

இது வறுமையினும் கடன் கொடித என்கின்றது.

கடன் வாங்குதல் பலவகை கிலைகளில் தழுவி எழுகின்றது. வியாபாரம் விவசாயம் முதலிய தொழில்களை வளமாக நடத்தும் பொருட்டுச் சிலர் கடன் வாங்குகின்றனர்; கலியாணம் முதலிய காரியங்களை உலக ஆடம்பரமாகச் செய்யக் கருதிச் சிலர் கடன் கொள்ளுகின்றனர்; சிலர் குடும்ப வாழ்க்கையின் செலவுக்காகக் கடன் படுகின்றனர். இங்கனம் பல வழிகள் கடன் அதுழைவுக்குக் காரணங்களாய் இடம் பெற்று கிற்கின்றன.

தொழில் முறையில் வாங்குவதை ஒரளவு பொறுத்துக் கொள்ளலாம்; அதையும் விாைவில் ஒழித்து விட வேண்டும்; ஆபத்துக் காலத்தில் அவசிய சகாயமாய்த் தழுவி உடனே அவ் வழுவினை கழுவ விட்டுத் தனது சுய கிலையில் முழு வலியுடன் கிற்றலே விழுமிய தகைமையாம்.

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/368&oldid=1324945" இலிருந்து மீள்விக்கப்பட்டது