பக்கம்:தரும தீபிகை 1.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தேழாம் அதிகாாம்.

இரப்பு. அஃதாவது யாசகத்தின் சே கிலைமை. மானத்தை அழித்து ஈனத்தை விளைக்கும் தினமான இதனை மனிதன் எவ் வழியும் அணுகலாகாது என இஃது உணர்த்துகின்றது. கடனும் இாப்பும் மடி மிடிகளின் படிகளாய்க் கடித கடிய உரியன ஆதலால் உடன் கெருங்கிய முறை கருதி அதன் பின் இது வைக்கப் பட்டது. 261. உள்ள தொழில்கள் உலகில் பல இருப்ப

எள்ளலுறுமிரவை என்றலைதல்-தள்ளரிய தாயடைந்து நில்லாமல் தாங்குமென நம்பியொரு பேயடைந்த தாமே பிழை. (க)

இக் கிலவுலகில் பல தொழில்கள் பாக்து விரிந்திருக்கின்றன. அவற்றுள் எதையாவது ஒன்றைக் கைக் கொள்ளாமல் இாப்பை மேற்கொண்டு ஒருவன் அலை கல் உரிய தாயினே அடையாமல் கொடிய பேயினை அடைந்தது போல் பெரிய கவரும் என்றவாறு.

இது இாவு தீது என அறிவு கூறுகின்றது. உள்ள தொழில் என்றது வாவு நலம் உடையனவாய் மருவி யுள்ள கருமங்களை உண்மை அவற்றின் தன்மை உணர வந்தது. தொழில் என்னும் சொல் அவயவங்களால் செய்வது என்னும் பொருளினது. o ---

தெய்வம் தொழுதல் போல் செய் கொழில் உய்தி நலம் உடையது. கருமம் செய்வதே கருமம் செய்த படியாம். அளவிட லரியன ஆதலின் தொழில்கள் பல என வந்தன.

உழுதல், நெய்தல், பண்டமாற்றல், கொண்டு விற்றல், உலோகங்களை உருப்படுத்தல், சித்திரம் வாைதல், சிற்பம் புனே தல் முதலாகக் கண்னுக்குத் தெரிந்தனவேயன்றி எண்ணிறந்தன எவ்வளவோ இருக்கின்றன. மனிதனுடைய எண்ணங்களின் அளவே தொழில்கள் வண்ணங்களாய் வருகின்றன.

செல்வமும் சீர்மையும் யாண்டும் நல்கி வருதலால் சன சமு காயத்துக்குத் தொழில்கள் உய்தி புரிந்து உறுதி சாந்தருள் ன்ெறன. உலகம் அவற்ருல் ஒளி மிகுந்து திகழ்கின்றது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/373&oldid=1324950" இலிருந்து மீள்விக்கப்பட்டது