பக்கம்:தரும தீபிகை 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது அதிகாரம் கு ண ம் .

அஃதாவது உள்ளப் பண்பான நல்ல தன்மைகள். மனி தனைப் புனிகளுக்கி யாண்டும் மகிமை மிகச் செய்யும் தனி மாண் புடையன. இக் குணநலம் உயிரின் அழகாய் ஒளி செய்து உயர் வருளி வருதலால் உடலழகின் பின் வைக்கப்பட்டது.

முன்னது புறத்தழகு; இஃது அகத்து அழகு என்க.

81. மக்கள் எனப்பிறந்த மாண்புடையார் வாய்மையருள்

ஒக்கப் படிந்துள் ளுணர்வுயர்ந்து-தக்க வகையா வளர்ந்து வருக மகிமை தொகையா வளரும் தொடர்ந்து. (க)

இ-ள் உயர்ந்த மக்களாய்ப் பிறக் கவர் வாய்மை அருள் முதலிய இனிய குண நலங்களை மருவி உணர்வு நலம் சுரந்து வரின் அரிய

மகிமைகள் பல உரிமையாய்ப் பெருகி வரும் என்ற வாறு.

இழிங்க பிறவிகள் பலவும் கடந்து உயர்ந்த மனிதப் பிறவியை அடைந்துள்ளமையால் மாண்பு உடையார் என மதிப் படைந்து கின் ருர், இங்ானம் உயர்க்க நிலையில் பிறந்திருந்தா லும் நல்ல இயல்புகள் இல்லையாயின் எல்லா மாண்புகளும் இழந்து இழிந்து படுவர் ; அங்ானம் பட்டு ஒழியாமல் ւտու படிந்து ஒழுகுக என்பதாம்.

வாய்மையையும் அருளையும் வாைந்து குறித்தது எல்லாத் தாய்மைகளுக்கும் அவை கிலேயமா புள்ளமை கருதி. வாக்கும் மனமும் முறையே இவை நோக்கி வந்தன.

பொய்யும் கொடுமையும் வெய்யன ஆதலால் அவற்றை அறவே ஒழித்து மெய்யும் கருணையும் மேவி வருக ! வரின் மேன்மைகள் யாவும் உன் பால் தாவி வரும்.

சக்தியமும் கருணையும் கடவுள் வடிவங்களாக் கருதப்பட் டுள்ளன: அவற்றை யுடையவன் தெய்வ கிலையமாய்ச் சிறந்து திகழ்கின்ருன். அவ்வுயர் நலங்களே மருவி உய்க என்க.

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/96&oldid=1324666" இலிருந்து மீள்விக்கப்பட்டது