பக்கம்:தரும தீபிகை 4.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. செ ல் வ ம் 1287 பெயர் பெற்று நின்றனர். ஒரு ஊரின் செல்வம் உலகம் பெறும் எனச் சீரும் சிறப்பும் பெற்றிருக்கது. 'முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கக் கவாஅ வளத்த காகி அரும்பொருள் கரூஉம் விருந்தின்தேம் - - - *. 野 •. T. . . . 睡 HH ஒருங்குகொக் கன்ன உடைப்பெரும் பண்டம் கலத்திலும் காலினும் தருவனர் ஈட்டக் குலத்திற் குன்ருக் கொழுங்குடிச் செல்வர்.” - (சிலப்பதிகாரம்) காவிரிப்பூம் பட்டினத்தின் செல்வ நிலையையும், அதிலிருந்த செல்வர்களையும் இது குறித்துள்ளது. ஆயிரக்தறுநூறு ஆண்டுக ளுக்கு முன்னர் இக்நாடு எ ந்நாடும் பொன்னுடு எனப் புகழ்ந்து போற்ற யாண்டும் வளங்கள் நிறைந்து உயர்ந்திருந்தது. இங் நாள் இன்ன நிலையில் இழிந்திருக்கிறது. * மக்களுக்குக் கேவையான பண்டங்களைப் புதிய புதிய முறைகளில் விளைத்து உலகம் முழுவதும் பரப்பிப் பெருவளம் படைத்து வந்த நாடு ஒரு வளமும் இல்லாமல் வறிய கிலேயில் f மறுகி யிருப்பது பெரிய பரிதாபமாயுள்ளது. எல்லாரும் செல்வச் சீமான்களா யிருக்கவே ஆசைப்படு கின்றனர். அதற்கு வேண்டிய ஆக்க வேலைகளில் நோக்கமின்றி புள்ளனர். வழி கெரிய இல்லையே! என்று கண்ணே மூடிக்கொ ண்டிருப்பது பழி; விழி திறந்து நோக்கி எவ்வழியும் செவ்வை யாப் ஊக்கி எழுந்து உறுதியோடு வேலை செய்ய வேண்டும். வானுலும் இல்லைகாண் வாழ்வு. தானுக முயன்று மனிதன் பொருளைத் கேடிக் கொள்ள வில்லையானுல் அவனுக்கு யாரும் பாதும் உதவி செய்ய முடி பாது என்பதை இது உணர்த்தி நின்றது. வானம் மழை பொழிந்தாலும், சுவர்க்கம் சுகமாய் இருந் தாலும் கன் கையில் பொருள் இல்லாதவனுக்கு அவை யாதொரு கலனும் செய்யா என்க. பிள்ளை அழுக பொழுதுதான் காய் வந்து பால் கொடுக்கிருள்; மனிதன் ஊக்கி முயன்ற போது கான் தெய்வும் நோக்கி உதவுகின்றது. ஆக்கம் வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/132&oldid=1326285" இலிருந்து மீள்விக்கப்பட்டது