பக்கம்:தரும தீபிகை 4.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. ப த வி 1321 உள்ளம் கோடிய அளவில் அந்த மனிதன் புல்லியனப்ட் பீடிழந்து படுகிருன். அது கோடாதுள்ளவன் மேலோனப் உயர்ந்து மேன்மை மிகப் பெறுகின்ருன். i 'கெடு நுகத்துப் பகல் போல கடுவு கின்ற நன்னெஞ்சிளுேர்." (பட்டினப் பாலே) எனச் செம்மையான சா ன்ருேர் நீர்மையை உருத்திரங் கண் னனர் என்னும் சங்கப் புலவர் இங்ாவனம் குறித்திருக்கிரு.ர். சமன்செய்து சீர்துாக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாமை சான்ருேர்க்கு அணி. (குறள், 118) மனக் கோட்டமின்றி யாண்டும் நேர்மையாய் நிற்கும் சீர் மையே மேலோர்க்கு அணி என நாயனர் இவ்வாறு வாய்மலர்ந் துள்ளார். இந்த அழகை இழந்திருப்பது அவலட்சனமாகிறது- o உயரிய உயிரணி உள்ளச் செம்மையே; அதனைப் பூண்டு கொள்; அஃது இல்லாமல் மணியணிகளை உடலில் காங்கி விணே பிலுக்கித் திரிவது காணத் தக்கதாம். இவ் வுண்மை இங்கே கா னத் தக்கது. அகத்தின் நேர்மை அற்புத அழகாய் நீதிமானப் பொற்புறுத்துகிறது. கெறியும் திேயும் எவ்வழியும் யாண்டும் பெ ரி ய மகிமைகளை அருளுகின்றன. கள்ளம் கரவுகள் கண்டு அறிந்து. நீதிபதி கருதித் தெளிய உரிய உறுதிநிலைகளை இது உணர்த்தி யுள்ளது. வழக்கில் நேர்ந்துள்ள வாதி பிரதிவாதிகளுடைய உரைகளை ஊன்றி உணர்ந்து உண்மை தெளிந்து நியாயம் வழங்க வேண்டியது நீதிமானுடைய கடமை ஆசலால் அதில் மடமை கேராமல் மதியூகியா யிருக்கல் வேண்டும். உரிய நியாயம் தவறி ல்ை அது கொடிய அகியாயமாப் முடியும்; முடி யவே நீதிபதி குடிகேடனப் நெடிய பழி யடைய நேர்கின்ருன். பொய்யுடை ஒருவன் சொல்வன் மையில்ை மெய்போ லும்மே மெய்போ லும்மே. (1) மெய்யுடை ஒருவன் சொலமாட் டாமையால் பொய்போ லும்மே பொய்போ லும்மே. (2) இருவர்தம் சொல்லேயும் எழுதரம் கேட்டே இருவரும் பொருந்த உரையார் ஆயின் 166

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/166&oldid=1326319" இலிருந்து மீள்விக்கப்பட்டது