பக்கம்:தரும தீபிகை 4.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு 1395 கொலைஞன், கள்ளன், களியன், காமி, பொய்யன் என் லும் பேர்கள் மனிதரை எவ்வளவு வெய்யவராக்கி வெளி கெரி யச் செய்கின்றன. இழி செயல்கள் பழி துயர்களாய் விளைந்தன. உயர்ந்த மனிதப் பிறப்பை அடைந்தும் இழிந்த பழக்கங் களைப் பழகி ஈனராய்க் கழிந்து அழிந்து போவது ஞான சூனி யமாப் முடிந்து நிற்கிறது. கள் வெறியைக் கிளப்பி அறிவைக் கெடுக்கிறது; அதனல் அவகேடுகள் விளைகின்றன. மது உள்ளே போக மதி வெளியே போகும் என்னும் பழமொழி கள்ளைக் குடிப்பதால் விளையும் பழி கேடுகளை விழி தெரிய விளக்கியுள்ளது. "அறிவை அழிக்கும்; செயல் அழிக்கும்; அழியாமானம் தனே அழிக்கும்; செறியும் அறிஞர் மதியாத சிறுமை விளேக்கும்; ஈன்ருளும் முறியும் வெறுப்பு மிக விளக்கும்; முனிவு விளேக்கும்; பகை அஞ்சாக் குறிகள் விளேக்கும்; நகை விளேக்கும்; கொள்ளேல் கள்ளுண்டலை மைந்தா!' (விநாயக புராணம்) கள் உண்பதால் விளையும் தீமைகளை எல்லாம் குறித்துக் காட்டி ஒரு அர சன் தன்னுடைய மகனுக்கு இன்னவாறு புத்தி போதித்திருக்கிருன். உரிய ஒருவனுக்குச் சொன்னது உலக போதனையாப் உறுதி பயந்து நின்றது. எல்லா நலங்களுக்கும் எதுவாயுள்ள அறிவு பொல்லாத கள்ளால் புலையாயிழிந்து போகின்றது. போகவே குடிகாரனு டைய பரிதாப நிலை பெரிதாப் கின்றது. இனிய கண்ணிரைக் குடித்து இன்பமாய் வாழவந்த மனிதன் கொடிய கள்ளைக் குடித்துப் பழிகேடனப் அடியோடு அழிவது அவலக் காட்சி யாப்க் கவலைகளை விளைத்து வருகின்றது. மனிதனுக்கு அறிவு மாட்சிமை கருகிறது; மதுவைக் குடி த்து அறிவைக் கெடுத்து மதி கேடனப் இழிந்து ஒழிந்து போ காதே; உண்மையை உணர்ந்து உறுதிநலம் கெளிந்து உயர்ந்து வாழுக. புனித வாழ்வு புண்ணியமாப் மிளிர்கின்றது. _ _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/242&oldid=1326407" இலிருந்து மீள்விக்கப்பட்டது