பக்கம்:தரும தீபிகை 4.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 522 த ரு ம தி பி ைக விடய இச்சைகள் கொடிய துன்பங்களையே விளைத்து வரு கலால் அவற்றை நஞ்சுகள் என அஞ்சி நெஞ்சை நெறியே செலுத்தி உயர்ந்த குறிக் கோளுடன் மேலோர் ஒழுகி வருகின் றனர். அகளுல் அரிய கதிகளை அடைந்து கொள்ளுகின்றனர். சிறிது வழுவினும் பழி துயரங்கள் படியும் ஆதலால் ஒழுக் கத்தை உயிரினும் இனிமையாக உரிமையாடு அவர் பேணி உயர் கின்றனர். நெறிமுறைகள் நிலைத்துவரும் அளவு பெருமைகள் கழைத்து வருகின்றன. ஒரு முறை தவறினல் பல காலமும் அவலமடைய நேரும் ஆதலால் நெறி பிறழாமல் நெஞ்சைக் கவலையோடு காத்து அஞ்சு புலன்களையும் அஞ்சி எ ன் று ம் விழிப்புடன் அவர் மேலேறிப் போகின்ருர். அயல்.எங்கும் தீ மண்டி எரிகிறது; அதன் மேலே ஒரு சிறிய பாலம் அமைந்துள்ளது; அதன் நடுவே நடந்து செல்பவர் எவ்வளவு எச்சரிக்கையாய் ச் செல்வாரோ அவ்வளவு விழிப் போடு வெவ்விய உலக மையல்களைக் கடந்து செல்லுகின்ற உத் தமரே திவ்விய மகிமைகளை அடைந்து கொள்ளுகின்றனர். 'ஏறுமயிர்ப்பாலம் உணர்வு இந்தவிடயங்கள் நெ( பாறுஎனவும் கன்ருய் அறிந்தேன் பராபரமே.” இந்திரிய போகங்கள் நெருப்பாறு; மெய்யறிவு மயிர்ப் பாலம்; அக்க மெல்லிய பாலத்தின் வழியே வழுவாமல் நடந்து கடந்தவர் பேரின்ப நிலையை அடைந்து கொள்கின்றனர்; வழு வினவர் அழி துயரங்களில் விழ்ந்து அவலமாய் அழிந்துபோகின் றனர். அவ்வாறு கழுவி விழாமல் விழுமிய வழியே சென்று முத்தித்தலத்தை அடையும்படி செய்தருள் என இ ைற வ னே நோக்கித் தாயுமானவர் இங்ஙனம் உருகி வேண்டியிருக்கின்ருர். நெருப்பாற்றை மயிர்ப்பாலத்தால் கடந்ததுபோல் என்னும் பழமொழியால் உலக மையல்களைக் கடந்து முடிவு காண்பது எவ்வளவு அருமை என்பது எளிதே தெளிவாம். "தனியனேன் பெரும்பிறவிப் பெளவப் தெவ்வத் தடந்திரையால் எற்றுண்டு பற்றுஒன்றின்றிக் கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/369&oldid=1326535" இலிருந்து மீள்விக்கப்பட்டது