பக்கம்:தரும தீபிகை 5.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1664 த ரும தீ பி. கை 693. ஈனமலம் தின்னும் இழிகோழி பன்றிகளே மான மனிதர் மனம் கொண்டே-ஊனமுற உண்ணுகின்ருர் என்னே உணர்வு படைத்திருந்தும் எண்ணுகின்ருர் இல்லே இ.ைத. (க) இ-ள் மலத்தைத் தின்னுகின்ற இழிந்த கோழி பன்றிகளை உயர்ந்த மனிதர் உவந்து உண்ணுகின்ருர்களே! நல்ல உணர்வு பெற்றிருந்தும் இங்கப் பொல்லாத புலை நிலையை உணர வில்லை யே! உனர்ந்து உய்ய வேண்டும் என்பதாம். உண்ணுவதை எண்ணும்படி இது உணர்த்துகின்றது. அறிவு மனிதனிடம் உயர் நிலையில் அமைந்திருக்கிறது. கண் ஒளியால் காட்சிகளைக் கண்டு கருதிக் கொள்ளுதல் போல் அறி வொளியால் அறிய பல மாட்சிகளை ஆராய்ந்து அவன் தெளிந்து கொள்ளுகிருன். சுருதி யுக்தி அனுபவங்களைக் கொண்டு நெறி முறைகளை யுணர்ந்து நீதி நிலைகளின் வழியே நீர்மையோடு ஒழுகி வருபவனே எவ்வழியும் சீர்மையாளய்ைச் சிறந்து விளங்குகிருன். சிலம் கோயின் செவ்வி கோய்ந்து வருகிறது. தனது உயிர் வாழ்க்கை இனிமையும் தாய்மையும் மருவி வரும்படி எவன் கருதி ஒழுகி வருகின்ருனே அவன் விழுமிய நிலையில் உயர்ந்து தனிமையான மகிமை மாண்புகளை அடைந்து கொள்கிருன். செயல் நலமுற உயர்வு ஒளி பெறுகின்றது. ஒருவனுடைய உணவும் உடையும் சுத்தமாகக் கோப்ந்து வரின் அவன் அகமும் புறமும் உத்தமகுப் வாய்ந்து வருகிருன். மனிதன் எண்ணுகின்ற எண்ணங்கள் எல்லாம் பெரும்பா அம் அவன் உண்ணுகின்ற உணவின்படியே உருவாகி வருகின் றன. வித்தும் விளைவும் போல் உணவும் உணர்வும் காரண காரி யங்களாய்ஒத்திருக்கின்றன. இவ்வுண்மை உய்த்துணர வுரியது. உணர்வு நீதி நெறிகளோடு உலாவிவரின் அந்த மனிதன் மேலான் நிலையில் ஒளி பெற்றுள்ளான் என்பதை உணர்த்தி வருகிறது. “The sentiment of virtue is a reverence and delight in the presence of certain divine laws.” (Emerson) 'சில தெய்விக நெறிகளில் தோன்.றுகின்ற கண்ணிய இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/125&oldid=1326682" இலிருந்து மீள்விக்கப்பட்டது