பக்கம்:தரும தீபிகை 5.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1740 த ரும தீ பிகை பழி கலவாததே விழுமிய வாழ்வாம்; பரம புனிதமாய் உயர்ந்து அது ஒளி சிறந்து திகழும். பொருள் எவ்வளவு மிகுந்திருப்பி உம் அது பழி புகுந்திருப்பின் எவ்வழியும் இழிந்ததேயாம். பழிமலந்து எய்திய ஆக்கத்திற் சான்றேர் கழிகல் குரவே தலே. (குறள், 657) பழி வழியில்வரின் அச்செல்வம் இழிவாம் என இது விழி தெரிய விளக்கியுளது. கள்ளம் வஞ்சம் கபடம் முதலிய பிழை வழிகளில் பொருளைச் சேர்த்து ஒருவன் பெரிய செல்வனப் வெளியேமினுக்கியிருப்பினும் அக்க இருப்புகிக்கை மிகவுடையதே. யாதும் كيوتا( புரு கபடி கம்மைப் பாதுகாத்து. அமைதியா யிருக்கும் விழுமியோரிடமுள்ள வறுமை அங்கப் பழியாளனு டைய செல்வத்தினும் கோடி மடங்கு மகிமையுடையதாம். பழியால் வந்த ஆக்கம் துயரத்தையே விளைத்து அவனே நரகத்தில் தள்ளி விடும் ஆதலால் அது இப்படி எள்ளப்பட்டது. பழி வழியில் வங்க பொருள் முதலில் இனிமையாய்த் தோன்றினும் பின்பு சிறுமையும் துன்பமுமே தரும்; ஆகவே அக்தப் ատ ஆக்கம் எவ்வழியும் அழி துயரமே என்று கருதி அதனை அடியோடு ஒழிய விட வேண்டும். “Bread of deceit is sweet to a man; but afterwards his mouth shall be filled with gravel.” (Bible) 'வஞ்சனேயால் வந்த உணவு ஒரு மனிதனுக்கு முதலில் சுவையாயிருக்கும்; பின்பு அவன் வாய் மண்ணையும் கல்லையும் விழுங்கும்” என்னும் இது இங்கே எண்ணி உணர வுரியது. பழி வினையால் எதையும் செய்யலாகாது; அவ்வாறு செப் யாதவரே தெய்வத் திருவருளேயடைந்து உய்தி பெறுகின்ருர். உயர்வும் இன்பமும் வரும் வழியை இதல்ை உணர்ந்து கொள் கிருேம். இன்பம் பொருளில் இல்லை; புண்ணியத்தில் உள்ளது. பழி படியின் அந்த மனிதன் இழிந்த கீழ்மகன் ஆகிருன். அது படியாவிடின் அவன் உயர்ந்த சான்ருேளுப் ஒளி மிகுந்து நிற்கின்ருன். கீழ்மை ஒழிய மேன்மை விளைகின்றது. இழிந்த காரியங்களைச் செய்ய காணுகின்ற காணமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/201&oldid=1326759" இலிருந்து மீள்விக்கப்பட்டது