பக்கம்:தரும தீபிகை 5.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1830 த ரும தி பி கை தோடு தோய்ந்து வராமல் முகத்து எதிரே வெளி வேடமாய்ப் புகழ்ந்து பேசுவதால் போலிப் புகழ்ச்சி முகத்துதி என வந்தது. இதற்குப் பலரும்ஆவலோடு யாண்டும் வசமாய் வருகின்றனர். “Flattery is the food of fools; Yet now and then your men of wit Will condescend to take a bit.” - (Swift) 'முகஸ்துதி மூடர்களின் உணவு அறிவாளிகளும் மறை வாய் வளைந்து வந்து அதனை விழைந்து கொள்கின்றனர்' என சுவிவ்ட் என்னும் மேல்நாட்டு அறிஞர் இவ்வாறு கூறியுள்ளார். போலியான புகழ்ச்சி மொழி சீவர்களுக்கு இவ்வளவு இனிப்பை விளைக்குமானல் உண்மையான புகழை அடைந்து கொண்டவன் எவ்வளவு பாக்கியவான்! எத்துணை நித்திய இன் பக்தை அவன் பெற்றவனுகிருன்! இதனை ஈண்டு உய்த்துணர வேண்டும். இனிய புகழ் கனி மகிமையான இன்பம் கருகிறது. சிறக்க மனித வாழ்வில் வந்தவன் தகுந்த புகழை அடைக் தபோதுகான் அவன் உய்தி பெற்றவனப் உயர்ந்து போகிருன். அவனையே கவிகள் யாண்டும் விழைந்து பாட நேர்கின்ருர். கெடாஅ நல்லிசை கிலே இத் தவா அலியரோ இவ்வுலகமோடுடனே. ” (பதிற்றுப்பத்து, 14) :அழியாத நல்ல கீர்த்தியை நிலைநிறுத்தி இவ்வுலகில் என்றும் நிலையாய் கின்று வருக எனச் சேரமன்னனைக் குறித்துக் குமட் டுர்க் கண்ணனர் என்னும் புலவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். கொடை முதலிய குணநலங்களால் ஒருவன் புகழ் அடைக் தபோது அவனுடைய பெயரை விழைந்து பேசி உலக மக்கள் அவனே கினைந்து மகிழ்ந்து வருகின்ருர், அவ்வரவு பர ம்பரையாக வழிமுறையே தொடர்ந்து வருதலால் அவன் என்.றும் அழியாக நிலையில் இவ் வுலகில் எங்கும் கின்றவன் ஆகின்ருன். “To live in hearts we leave behind, Is not to die.” (Thomas Campbell) 'மனிதர் இதயங்களில் தம் பெயர் இருக்கும்படி நிறுத்திச் சென்றவர் என்றும் இறவாமல் கின்றவரே யாவர்” என்னும் இது இங்கே அறியவுரியது. உலகர் உள்ளங்களில் புகழர் உள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/291&oldid=1326851" இலிருந்து மீள்விக்கப்பட்டது