பக்கம்:தரும தீபிகை 5.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1832 த ரும தீ பிகை கொள்ளுங்கள்; அதுவே உங்கள் அருமை உயிர்க்கு இனிய ஊதியமாப் இருமையும் அரிய இன்ப கலங்களை அருளும் என்க. இறப்பின் நிலையை எடுத்துக் காட்டியது பிறப்பின் பயனே விரைந்து பெறவேண்டி. அழிந்து படுமுன் அழியாக விழுமிய ஊதியத்தை அடைந்துகொள்ள வேண்டும்; அவ்வாறு அடைந்து கொள்ளாதவர் கடையராய்க் கழிக் து படுவர்.ஆகலால் அப் பாடு தெரிந்து உன் கூடு பிரியுமுன் பீடு பெறுக. உயர்க்க பிறவியில் உதயமாய் வந்தும் உரிய பயனைப் பெருமல் இழிந்து போவது மிகுந்த பழியாம்.அறிய வேண்டியதை அறிந்து அடையவேண்டி யதை விரைவில் அடைவதே அறிவுடைய மனிதனது கடமையாம். தனக்கு உரிய ஊதியத்தை உரிமையாப்ப் பெறுபவன் மேதை ஆகிருன்; அங்கனம் பெருதவன் பேதையாப் இழிகி முன். தனது கிழமையை இளமையில் அறியாதிருந்தாலும் வயது வளர்ந்த பின்னர ாவதுஉணர்ந்து உடனே உறுதி காணவேண்டும். இறந்து படுமுன் பிறந்த பயனை விரைந்து பெறவில்லையா ல்ை அது கொடிய மடமையாய் நீண்டு நெடிய பரிதாபமாய் மூண்டுவிடும். கனக்கு உரிய இனிய இலாபத்தை இழந்தவன் பெரியகேட்டை அடைதலால் அவனது அழிவு நிலையை அறியலாம். இளமை கழிந்தது; மூப்பு வக்கது; முதுகு வளைந்தது; பல்லு விழுந்தது; கண் ஒளி இழக்கது; காது செவிடாயது; வாய்மொழி குழறியது; இவ்வாறு மரணக் குறிகள் நெருங்கி வருதலை அறிந்தும் கன் உயிர்க்கு ஒரு நன்மையையும் நாடாமல் மூடமாய் இருப்பதுகொடிய புன்மையான நெடிய புலேக்கேடாம். “Men may live fools, but fools they cannot die.” (Edward young) :மனிதர் மூடராய் இருக்கலாம்; ஆனல் மூடராய்ச் சாகக் கூடாது.” என எட்வர்டு யங் என்னும் ஆங்கில அறிஞர் இங்க னம் கூறியிருக்கிருர். வயது முதிர்ந்து சாக நேர்ந்தபோதாவது தன் உயிருக்கு ஊதியமான நன்மையை மனிதன் மருவிக் கொள்ள வேண்டும் என்னும் உறுதி நலனே இகளுல் உணர்ந்து கொள்கிருேம். காலம் உள்ளபோதே பெறுவது சாலவும்ான்ரும். செழியன் என்னும் பாண்டிய மன்னன் அதிக இளமையி லேயே பெரிய புகழை அடைந்தான். திருஞானசம்பந்தர் பதினறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/293&oldid=1326854" இலிருந்து மீள்விக்கப்பட்டது