பக்கம்:தரும தீபிகை 5.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1834 த ரும தீ பி. கை இவன் புகழ் திங்கள் போல் எங்கும் விளங்கித் தோன்றுக எனப் புலவர் உளம் உவந்து கூறி யிருக்கிரு.ர். சந்திரன் இருள் நீக்கி Fo லகிற்கு இதம் புரிகின்ருன்; இவனும் துயர் நீக்கி உயிர்களுக்கு உதவி புரிந்துள்ளான். அவனது நிலவொளி எங்கும் பரந்து கின்றது. இவனது புகழ் ஒளி யாண்டும் நீண்டு நின்றது. கலங் கா கல் இசை என்றது எவ்வழியும் நிலை குலையாக நல்ல கீர்த்தி என்றவாறு. புகழ் மருவியபொழுது உயர்நிலை ஒளி பெறுகிறது. உலகம் நலமுற உதவி புரிந்து வருபவர் தலைமையான புகழை அடைந்து கொள்கின்றனர். உள்ளம் உயர்ந்து நல்லது செய்து எல்லாரும் புகழ இசைபெற்று வாழ்வதே எ ப்திய பிறவிக்கு இனிய பயனும். குணம் செயல்கள் இனிமை ஆய பொழுது மனிதனிடம் புகழ் தனியே மருவி வருகிறது. புகழ் புரிந்து புண்ணியம் சுரங்து கண்ணியம் பெறுக. ஒன்ருக நல்லது உயிர் ஒம்பல்; ஆங்கதன்பின் நன்ருய்ந் தடங்கினுர்க் கீத்துண்டல்---என்றிரண்டும் குன்ருப் புகழோன் வருகென்று மேலுலகம் கின்றது வாயில் திறந்து. (அறநெறிச்சாரம்) புகழ் விளைந்து வரும் நிலையும், அதனையுடையவன் அடை யும் கதியும் இங்கே உணர்ந்து இனிது தெளிந்து கொள்கிருேம். இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. புகழ் உயிர்க்கு ஊதியம். அரிய செயலால் அது மருவி வரும். அதனை யுடையவன் உயர்நிலை அடைவான். இறைவனும் அவனே உவந்து கொள்வான். ஈகையால் புகழ் இனிது விளைகிறது. பேரும் சீரும் பெருகி வருகின்றன. இசை பெற்றவரே திசை மெச்சநிற்கின்ருர், அது பெருதவர் அவமே அழிகின்ருர். சீர் பெற்றவர் சிரஞ்சீவிகளாப் வாழ்கின்ருர். o உயிரின் பயனை உரிமையோடு பெறுக. \ எச-வது புகழ் முற்றிற்று. = -- E

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/295&oldid=1326856" இலிருந்து மீள்விக்கப்பட்டது