பக்கம்:தரும தீபிகை 5.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1920 தரும பிேகை கொடுங்கோல் மன்னனது கடுங்கேட்டை இது காட்டியுள்ளது. நீதிமுறை திறம்பித் துேபுரிபவன் கடுங்கோலன் ஆகின்ருன். கல்லாத புல்லரையே தனக்குத் துணையாக அப் பொல்லாதவன் சேர்த்துக்கொள்வன்; அந்த மூடக்கூட்டம் உலகத்திற்குப் பெரும் பீடையாம் எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். கல்லாரையே அரசன் கயங் து கழுவ வேண்டும்; கல்லாரைக் கடிந்து ஒழிக்கவேண்டும் என்பது இங்கே தெளிந்துகொள்ள வந்தது. உரிய துணை அரிய நீர்மையுடையதேல் மேன்மையாம். அறிவாளிகளை எந்த அரசன் உரிமையோடு கழுவி உவந்து போற்றி வருகிருனே அவனுடைய ஆட்சி யாண்டும் மாட்சி அடைந்து வரும். தனது நிலைமைக்குக் கக்கபடியே மனிதன் துணை சேர்க்கின்ருன். அரசன் நல்ல கல்விமான் ஆளுல் கற்ற மாந்தரைக் கண் எனக் கருதி மருவிக் கொள்வன்; கல்வியறிவு இல்லை எனின் அவனுக்கு உரிய இனத்தையே அணைத்து நிற்பன். இனம் இனத்தையே நாடும் என்பது பழமொழி. கல்லாத கூட்டம் கலைமைக்கு வந்தால் கல்வியறிவை அத மதியாது. ஆட்சி புரிவதற்கு அறிவு எதற்கு? என்று வெறி கொண்டு அது பேசவும் கூடும். உருட்டு, புரட்டு, வஞ்சச்சூழ்ச் சிகள் ஆகிய இவையே ஒரு காட்டை ஆளப் போதும் என்று அக் கூட்டம் கோட்டி கொண்டு குலாவிக் கொழுத்துத் திரியும். மூட மக்களுக்கு மூர்க்கன் அரசன் ஆவான். என்பது முதுமொழி. காட்டு மக்களுடைய மடபை அளவு அவர் தலைமை வளமையாய் நிலைத்துவரும். நல்ல அறிவாளிகள் நிறைந்த காட்டில் கல்லாக மடையர்கள் தலைமையா யிருக்க முடியாது. மூடக் கலைமை மூண்டு வருமானல் அது காட்டுக்குக் கேடா கவே நீண்டு வரும். கல்லாக மடமையால் நல்லது காண முடி யாது. அல்லல்களே கண்டு அவலமடையவே நேரும். கல்வியறிவோடு அரிய பல பண்பாடுகளும் அரசனிடம் மருவி யிருக்கவேண்டும். ஒரு அரசன் எவ்வாறு செவ்வியன யிருக்கவேண்டும் என வெள்ளைக்குடி நாகனர் என்னும் சங்கப் புலவர் சோழமன்னனை நோக்கிக் கூறியிருக்கிரு.ர். அரிய பல பொருள்கள் மருவியுள்ள அது கருதியுணர வுரியது. அரசின் இயல்புகளை நன்கு விளக்கியுள்ள அப் பாசுரம் அயலேவருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/381&oldid=1326948" இலிருந்து மீள்விக்கப்பட்டது