பக்கம்:தரும தீபிகை 5.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1928 த ரும பிே கை அறிவு பலவகை நிலைகளில் பரவிவிரிந்து ஒளிபுரிந்துள்ளது. இயல் இசை கணிதம் முதலிய கலைகளில் பழகி அறிவு தெளிவு பெற்றி ருப்பினும் காரியங்களைச் சீரியமுறையில் செய்து முடியாதாயின் அந்த அறிவு ஆட்சிக்குப் பயன்படாது. கரும சாதனைகளில் கோய்க்க வெற்றி பெற்று வரும் அளவே கொற்றவன் அறிவு கூர்மையாய்ச் சீர்மையுற்று மேன்மையோடு மிளிர்கிறது. காட்டு மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி எவ் வழியும் செவ்வியராப் அவர் வாழ்ந்து வரும்படி சூழ்ந்து செய் யின் அவன் செங்கோல் வேங்களுய்ச் சிறந்து விளங்குகின்ருன். மன நிம்மதியோடு அமைதியா ப் வாழும் வாழ்வு எந்த ஆட்சி யில் கிடைக்கிறதோ அந்த அரசை மக்கள் மிக்க வுரிமையாய் விழைந்து போற்றி மகிழ்ந்து வாழ்த்தி வருவர். குடிசனங்கள் உள்ளம் உவந்து வாழ உரிமை கூர்ந்த பேணி அரிய பல நீர்மைகள் வாய்ந்து சீர்மை கோப்ந்துள்ள அரசன் தேவரும் புகழ்ந்து மகிழச் சிறந்து திகழ்கின்ருன். செய்ய வேண்டியதைச் செய்து முடித்த கருமவீரன் எனக் தருமதேவதையும் அவனே உரிமையோடு உவந்து புகழ்கின்றது. அரிய பல குண நலங்கள் அமைந்து உயிரினங்களை இனிது பேணி உயர் புகழ் நிறுவிய பெரியவன் என கம்பிநெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் யாண்டும் இசை பெற்று கின் ருன். அவனுடைய நீர்மை சீர்மைகளைக் குறித்துப் பேரெயில் முறுவலார் என்னும் சங்கப் புலவர் வியந்து பாடியுள்ளார். சிறந்த பண்புகள் நிறைந்த அந்தப் பாடல் அயலே வருகிறது. தொடியுடைய தோள் மணந்தனன்; கடிகாவில் பூச் சூடினன்; தண்கமழும் சாந்து விேனன்; செற்ருரை வழி தபுத்தனன்; 5 நட்டோரை உயர்பு கூறினன்; வலியர் என வழி மொழியலன்; மெலியர் என மீக் கூறலன்; பிறரைத்தான் இரப்பு அறியலன்; இறந்தோர்க்கு மறுப்பு அறியலன் 10 வேந்துடை அவையத்து ஒங்குபுகழ் தோற்றினன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/389&oldid=1326956" இலிருந்து மீள்விக்கப்பட்டது