பக்கம்:தரும தீபிகை 5.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1624 த ரும தீ பி. கை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்’ என்னும் துடிப்பினலே யே அவன் கொடுத்துத் தன் உயிர்க்கு ஊதியங்களாகப் புகழ் புண்ணியங்களை வளர்த்துக் கொள்ளுகிருன். o

உலுத்தன் மிடிவருமென்று உள்வெருவி நல்கான் கிலத்தென்று ஒருவன் நிகழ்த்த--கலத்திகைகூர் வள்ளலும் அவ் அச்சம் மருவியே நல்குமென விள்ளலுற்ருன் மற்ருெருவன் மெய் '

உலோபியும் வள்ளலும் உள்ள நிலைகளை இது உல்லாச வினேகமாய் விளக்கியுள்ளது. உண்மை நிலைகள் உணரவுரியன. அவனது அச்சம் ஊன நிலையில் ஊன்றியது; இவனுடை யது ஞான நிலையில் தோன்றியது, ஈகையாளன் இம்மையிலும் மறுமையிலும் பெருமை பெறுகின்ருன், உலோபன் இருமையும் சிறுமையுறுகின்ருன். கொடுத்து வந்தவன் அங்கப் புண்ணியத் கால் பெருஞ் செல்வங்களை அடைய நேர்கின்ருன்; கொடாது கின்றவன் மறுபிறப்பில் வறுமையாளனுகவே வருகின்ருன். நரக துன்பம் பாவத்தால் வருகிறது; பாவம் வறுமையால் உறுகிறது; அங்க வ.றுமை இர ங்கி ஈயாத கொடுமையால் நேர் கிறது; ஆகவே கொடிய நரகத்திற்கும் கெடிய கரித்திரத்திற் கும் மூல காரணம் உலோபம் என்பது தெளிய வக்கது. 'படர்நரகம் பாவத்தால் பாவம் மிடியால் மிடிஈவி லாமையினு மே.” இதனை இங்கே கருதிநோக்கி உறுதியுண்மையை யுனர வேண்டும். ஈயாத உலோபர் வாழ்வு எவ்வழியும் வெவ்விய பழியும் துயரங்களுமாய் மருவி விரிகிறது. கடுகசையோடு பொருளைச் சேர்த்து வைக்கின்ருர், அதிலிருந்து ஒரு பயனும் பெருமல் ஊனமாய் ஒழிந்து போகின்ருர். உடாஅதும் உண்ணுதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார்---கொடாஅது வைத்திட்டி ரிைழப்பர் வான்தோய் மலேகாட உய்த்திட்டும் தேனிக் கரி. (நாலடியார், 10) தாம் வருந்திச் சேர்த்து வைக்க கேனப் பிறர் கவர்ந்து போக ஈக்கள் கலைந்து அலைந்து திரிகல்போல் உலோபிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/85&oldid=1326642" இலிருந்து மீள்விக்கப்பட்டது