பக்கம்:தரும தீபிகை 6.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2258 த ரும தி பி கை மனவுறுதியைத் தருகின்றன. கன் குடிவாழ்க்கை உயர்ந்த கிலை யில் சிறந்து விளங்க வேண்டும் என்று எண்ணுகின்றவன் உள் ளம் துணிந்து ஊக்கி முயல்கின்ருன். அம்முயற்சியால் உயர்ச்சி கள் உளவாகின்றன. உறுதி முளையில் உயர்வுகள் விளைகின்றன. ஆதன் என்னும் சேர மன்னன் நல்ல நீதிமான். சிறந்த செல்வங்கள் அவனிடம் நிறைந்திருந்தன. இருந்தும் அ வ ன் ஊக்கி முயன்.று அரசை வி ரு த் தி செய்து ஆக்கங்கள் பல அடைந்து அதிசய கிலேயில் எவரும் துதி செய்ய வாழந்தான். அவனுடைய மன நிலையையும் வினையாண்மையையும் குணநலங் களையும் கபிலர் வியந்து பாடியுள்ளார். அயலே வருவது காண்க. வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொரு.அது இடம்சிறிது என்னும் ஊக்கம் துரப்ப ஒடுங்கா உள்ளத்து ஒம்பா ஈகைக் கடந்தடு தானேச் சேரல் ஆதனை யாங்கனம் ஒத்தியோ விங்குசெலல் மண்டிலம் பொழுதென வரைதி புறம்கொடுத்து இறத்தி மாறி வருதி மலேமறைந்து ஒளித்தி அகலிரு விசும்பி னுைம் பகல் விளங் குதியால் பல் கதிர் விரித்தே. (புறம்) மன்னன் முயன்று உயர்ந்துள்ள நிலையை இது வரைந்து காட்டியுள்ளது. பகல் ஒளியாகிய சூரியனிலும் இவ்விரியன் புகழ் ஒளி பாப்பி உயர்வா வாழ்ந்துள்ளான் எனக் கவி சுவை யாகப் புனைத்து கூறியிருக்கிரு.ர். ஊக்கம், ஒடுங்கா உள்ளம் ஆகிய இந்த இரண்டுமே இவனுடைய உ பர்ச்சிகளுக்கெல்லாம் மூலகாரனமா இருந்துள்ளமையை இங்கே தெரிந்து கொள் கிருேம். சிறந்தமனவுறுதிஉயர்ந்த மேன்மைகளை அருளுகின்றது. உள்ளம் உயர்ந்த பொழுது எல்லா உயர்வுகளும் அங்கே வெள்ளமாய் விரைந்து வருகின்றன. சிறந்த ஊக்கம் உடைய வன் கிறைந்த ஆக்கங்களை நேரே அடைந்து கொள்கிருன். மனம் பெரிதாப் விரிய மனிதன் பெரியவளுப் வருகிருன். A great mind becomes a great fortune. (Seneca) பெரிய உள்ளம் பெரிய செல்வங்களாய் வருகிறது என் லும் இது ஈண்டு அறியவுரியது. உள்ளம் நல்லதாகுல் எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/435&oldid=1327836" இலிருந்து மீள்விக்கப்பட்டது