பக்கம்:தரும தீபிகை 6.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்பத்தெட்டாம் அதிகாரம் உ ர ம். அஃதாவது உபகார நிலையால் ஓங்கி வரும் திண்மை. தனது காக்கை உயர்த்தி மனிதனை மாண்புறுத்தி வருதலால் ண் டு இது வைக்கப்பட்டது. தரத்தில் வளர்ந்து உரத்தில் உயர்ந்து உப்தி பெறுக என உணர்த்தியுள்ளமையால் உறவுரிமைகள் உணரலாகும். உள்ளம் உரம் பெற உயர்வுகள் ஒங்குகின்றன. 871. தாளாண்மை யோடுமுன் தாமீட்டி வந்ததை வேளாண்மை செய்யின் வியனுகி-ளோண்மை எங்கும் பரவி இசைபெருகி கிற்குமே பொங்கும் மகிமை பொலிந்து. (க) இ-ள். முயற்சி செய்து ஈட்டிய பொருளை உயிர்களுக்கு இதமா உபகாரம் செய்க, அவ்வாறு செய்யின் அது மேன்மையாப் வளர்ந்த புகழும் புண்ணியமும் பயந்து எவ்வழியும் செவ்விய கலங்களே அருளித் திவ்விய மகிமைகளை வினைத்து வரும் என்க. இனிய செயலும் இயலும் மனிதனுடைய உயர்நிலைகளுக்கு மூலகாரணங்களாயுள்ளன. உரிய பான்மைகளிலிருந்து பெரிய மேன்மைகள் பெருகி வருகின்றன. பெற்றி அளவே பெருமை என்னும் பழமொழி அ ரிய பல பொருள்களை உய்த்துணரக் செய்துள்ளது. நீர்மையிலிருங்கே சீர்மைகள் வி ைஇன்றன. இங்கே மூன்று ஆண்மைகள் அடையடுத்து வந்துள்ளன. ஆள் என்னும் சொல் மனிதனேக் குறித்து வருகிறது. இந்த ஆண்மகன் ஆற்றிவரும் நீர்மையே ஆண்மை என அமைந்தது. ஆடவனிடம் ஆளும் தன்மை கூடியுள்ளமையால் ஆண்மை யாளன் என நேர்ந்தான். ஆண்டவன் என்னும் அருமைப் பெய ரும் இந்த ஆண்மையடியாகவே கேண்மையாக் தோன்றியுளது. தாளாண்மை என்றது முயற்சியை. கால் பெயர்ந்து ஆற்று வது என்னும் காரணக் குறியாய் வக்கது. கருங்கடல் கடக்கம் மலைவனங்களில் நடந்தும் அயலிடங்களில் அலைந்தும் ஆற்றி வரு வது என உழைப்பு நிலையை இது இங்கு நன்கு விளக்கி கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/453&oldid=1327854" இலிருந்து மீள்விக்கப்பட்டது