பக்கம்:தரும தீபிகை 7.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சி ற ப் பு 2477 யாதொரு துயரமும் நேராமல் எவ்வழியும் சுகமாய் வாழ வே யாவரும் விரும்புகின்றனர். தேகசுகங்களும் போக நுகர்வு களும் எவ்வளவு வளமா அமைந்திருந்தாலும் மன அமைதியில் லாமல் அல்லலுற்று உழலும் அவல நிலையைச் செல்வரிடமும் அரசர்களிடமும் வரிசையா யாண்டும் நேரே கண்டு வருகிருேம். பொறி புலன்களால் நுகர்ந்த வருவது புலையான கிலேய து ஆதலால் அது சிற்றின்பம் எனச் சிறுமை யுற்று கின்றது. அருந்தலும் பொருந்தலும் திருந்திய சுவைகளில் செறிந்திருந்தா லும் மூப்பும் பிணியும் மூண்டு நீண்டு யாண்டும் அல்லல்களோடு வருக்தி அழிவதே மானிட வாழ்வாப் மருவியுளது. உண்டு கழித்தேன் ஒருசுகமும் இப்பிறப்பில் கண்டு களியேன் கதி இழந்தேன். என்று பண்டு ஒரு அரசன் பரிந்து வருந்தியுள்ளதும் ஈண்டு அறிந்து கொள்ள வுரியது. பொறி நுகர்வு வெறி நிகழ்வாகிறது. சிறக்க மனித அறிவுக்குப் பயன் உயர்ந்த புனித நிலையை அடைக் உப்ந்து கொள்வதேயாம். மேலான நூலறிவுக்குப் பயன் மெய்யானவாலறிவனே கினைந்த நினைந்து .ெ ஞ் ச ம் கரைந்து வருவதே; அவ்வாறு வரின் வெவ்விய பிறவித் துயரங் கள் வேரோடு அறுத்துபோம். ஆனந்த கிலேயமான ஆதிமூலப் பொருளைக் கோப்க்க அளவு தீது மூலங்கள் நீங்கிச் சீவன் திவ்விய மகிமையை எய்திக் கேசு மிகப் பெறுகின்றது. மனிதப் பிறவி பெறுதற்கு அரியது; அருமையான இதனை உரிமையாகப் பெற்றவன் உறுதியாகப் பெற வுரியது மீண்டும் பிறவாடிையே; அவ்வாறு பெறவில்லையானல் அப்பிறப்பு சிறந்த பயனே இழந்து இழிந்த பழிபோடு வினே அழிந்து படுவதாம். இக்காயம் நீங்கி இனி ஒரு காயத்தில் புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின் ! எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதுஎன்று அக்காலம் உனன அருள்பெற லாமே. (திருமந்திரம்) எடுத்த இக்க உடம்பே முடிவ னகாப் இருக்க வேண்டும்; அடுத்த உடலை அடையலாகாத; அவ்வாறு பிறவாத நிலையை அடைந்தவனே பிறவிப் பேற்றைப் பெற்றவனகிருன். அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/168&oldid=1327129" இலிருந்து மீள்விக்கப்பட்டது