பக்கம்:தரும தீபிகை 7.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சிறப்பு 2479 மொழிந்துள்ளமையை இ த ைல் உணர்ந்து கொள்கிருேம். அடுத்த உடல் அடையாதபடி தன் உயிரை உடையவனுக்கே உரிமையா இவர் கொடுத்திருப்பது கூர்ந்து சிக்திக்கத்தக்கது. 986. துன்பத் தொடர்பு தொடராமல் தோன்றினேன் இன்பப் பிறப்பே இனிதோங்கி-முன்பென்றும் காணுத காட்சிகளைக் காட்டிக் கதிகலங்கள் பூணுகப் பூணும் புனேந்து. (சு) அல்லலான துயரங்கள் கோயாமல் நல்ல பிறவியில் பிறந்த வன் எவ்வழியும் இனியனப் ஒழுகி விழுமிய நிலையில் அரிய கலங் களைக் கண்டு திவ்விய கதிகளைச் செவ்விதாப் பெறுவன் என்க. உடலோடு தோன்றிய உயிரினங்களுள் மனிதனுடைய தோற்றம் உயர்வுடையது. சிறந்த மதிநலம் வாய்ந்தது. ஆதலால் பிறந்த பிறவியின் பயனத் தெளிவா உணர்ந்து அதனை அடைந்து கொள்ள விழைந்து எவ்வழியும் விரைந்து நேர்கின்றது. அழிகின்ற ஊன உடலுள் அழியுாத ஞானஉயிர் வினையின் வழியே வந்து தங்கி நினைவின் வழியே வாழ்க் தி வருகிறது. சுக துக்கங்களை வகையா வகுத்து உணர்ந்து கொள்கிறது. வினைத் தொடர்புகளையும் விளைவுகளையும் தெளிவாத் தெளிந்து அவற்றிலி ருந்து உய்யும் வழிகளை ஒர்ந்து உறுதி நிலைகளை மருவி மகிழ்வதே அரிய மகிமையாப்ப் பெருமை பெறுகிறது. உற்ற துயர்கள் யாவும் நீங்கி உயிர் உயர்வுறும்படி செய் வதே பெற்ற பிறவியின் பெரும் பேரும் ӦЈ oЛГ முத்தர்கள் மொழிந்துள்ளது சக்திய ஒளியாய் ஒங்கி நித்தியமும் நிலவி நிற்கிறது. தெளிந்த அனுபவ மொழிகள் சீவ அமுகங்களாயின. பிறப்பில் எவ்வழியும் துன்பங்களே பெருகியுள்ளமையால் பிறவாமை பேரின்பம் என வந்தது. பிறவி வேதனைகள் மறவி யுருதபடி துறவிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். தாய் உத ரத்திலிருந்து நோயுழந்து வீழ்ந்து கரணியில் வந்த சாக்தனேயும் சஞ்சலமாய்ச் சலித்து வாழ்ந்து ஆங்கனே யாதும் அறியாமல் மாந்தர் மாய்ந்து போவது மாய விசித்திரமாய் மருவியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/170&oldid=1327131" இலிருந்து மீள்விக்கப்பட்டது