பக்கம்:தரும தீபிகை 7.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2518 த ரும தி பி கை பாாறியும் அறிவினுமிப் பார்மேல் கின்ற பசுஞானத் தானும் எட்டிப் பார்க்கொணுத பேரறிவே! சிற்றறிவேற்கு இருளைங்க்கும் பேரொளியே அங்கயற்கண் பிரியா தானே யாாறிவார் தமிழருமை என்கின் றேன்என் அறிவீனம் அன்ருேவுன் மதுரை மூதூர் நீர்அறியும் கெருப்பறியும் அறிவுண்டாக்கி அேறிவித்தால் அறியும் கிலமும்தானே. (மதுரைப்பத்து) வே போதத்தால் சிவனை அறிய முடியாது; அவன் அருள் பெருகி வரும்படி மனம் புனிதமாக வேண்டும்; அவ்வாருளுல் தெய்வ நிலை யாவும் தெளிவாப் விளங்கும் எனப் பரஞ்சோதி முனிவர் இங்கனம் பரஞ்சோதி வழியை விளக்கியிருக்கிரு.ர். தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுரிமையை உணர்ந்த போது பிரிக்க கின்ற காயை கினைந்து பிள்ளை அழுவது போல உள்ளம் உருகி ஞானிகள் அழுகின்றனர். உருக்கமான இந்த அன்பு நிலையில் பரமன் உரிமையோடு விரைந்து அருள் புரிகின் முன். தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு உள்ளியுணரவுரியது. பால்கினேந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து பாவியேன் உடைய ஊனினே உருக்கி உள்ஒளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து புறம்புறம் கிரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனேத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுங் தருளுவது இனியே. (திருவாசகம்) பெற்ற தாயினும் போன்போடு வந்து தனக்குச் சிவபெரு மான் அருள் புரிந்துள்ளதை மாணிக்கவாசகர் இவ்வாறு குறித் திருக்கிருர். பத்தியும் ஞானமும் பெருகிவரின் வேன் சிவனப் மருவி வருகிறது. ஞான ஒளி அவனே நேரே காட்டுகிறது; அன்பு அவனது இன்ப சலன இனித ஊட்டுகிறது. முன்னே ஞான முதல்தனி வித்தினைப் பின்னே ஞானப் பிறங்கு சடையன என்னே ஞானத்து இருளறுத்து ஆண்டவன் தன்னே ஞானத் தளையிட்டு வைப்பனே. (தேவாரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/209&oldid=1327170" இலிருந்து மீள்விக்கப்பட்டது