பக்கம்:தரும தீபிகை 7.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞ | ன ம் 2527 உனது சிவ போகத்தை எனக்குக் கொடுத்தருளினப்! சான் ஆனந்தக் கடலில் மூழ்கினேன்; என்னல் நீ என்ன அடைக் காய்? என்று இறைவனை நோக்கி உள்ளம் உருகி யிருக்கிரு.ர். வோத்துமாவும் பரமாத்துமாவும் ஒன்ருய்க் கலந்து மகிழும் காட்சியை இங்கே கண்டு மகிழ்கின்ருேம். மனம் புனிதமாப் உருகினல் ம னி த ன் தெய்வமாகிருன். அது மாசு படிந்து மலினம் அடைந்தால் அவன் சீசனப் இழிந்து ஒழிகிருன். சித்தசுத்தி வாய்ந்த அளவு மெய்யுணர்வு மேன்மையாய்த் தோன்றுகிறது; தோன்றவே பொப்ப்பொருள்களை அருவருத்து வெறுத்து மெய்ப்பொருளே கினைந்து உருகுகின்ருர்; அந்த உருக் கத்தில் உரைகள் உணர்ச்சிப் பெருக்கோடு ஓடி வருகின்றன. படமுடியாது இனித்துயரம் படமுடியாது அரசே! பட்டதெல்லாம் போதும் இந்தப் பயம்தீர்த்து இப்பொழுதுஎன் உடலுயிர் ஆதியளல்லாம் எேடுத்துக் கொண்டுன் உடல்உயிர் ஆதியஎல்லாம் உவந்துஎனக்கே அளிப்பாய்! வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள் மணியே.என் குருமணியே மாணிக்க மணியே நடனசிகா மணியே.என் நவமணியே ஞான கன்மணியே பொன்மணியே நடராச மணியே. (அருட்பா) என்னுடைய உடல் பொருள் ஆவி யாவும் நீ எடுத்துக் கொண்டு உன்னுடைய நீர்மைகளே எனக்கு அளித்தருள் என்று இறைவனை நோக்கி இராமலிங்க அடிகள் இவ்வாறு வேண்டி யிருக்கிரு.ர். பரமனேடு சீவனுக்கு உள்ள தொடர்புகளை உணர்க் தவர் ஞானிகள் ஆகின்ருர்; ஆகவே அவனேடு எகமாய்க் கலந்து எவ்வழியும் திவ்விய சுகமா அவர் இன்புறுகின்ருர். யானும் தாய்ை ஒழிந்தானே யாதும் யவர்க்கும் முன்னேனே தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணத்த தனிமுதலே தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகித் தித்தித்துஎன் ஊனில்உயிரில் உணர்வினில் கின்றஒன்றை உணர்ந்தேனே. (திருவாய்மொழி) கம்மாழ்வார் இறைவனேடு தோய்ந்து பேரின்ப நிலையில் திளைத்துள்ளமையை இது உணர்த்தியுள்ளது. மருள் நீங்கித் தெருள் அடைந்த பொழுது உயிர் பரமாப் உயர்ந்து உய்தி பெறுகிறது. பெறவே போானக்த நிலையில் ப்ெருகி மகிழ்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/218&oldid=1327179" இலிருந்து மீள்விக்கப்பட்டது