பக்கம்:தரும தீபிகை 7.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2洛99 தரும தி பி கை அரிய தவம் புராது பெரிய கதியைப் பெறுவர் என்பது இங்கே தெரியவந்தது. உயர்ந்த உத்தமர் கிலே உய்த்துணர கின்றது. சிறந்த பொன் போன்றவரிடமே தெளிக்க ஞானமும் உயர்ந்த மானமும் உரிமையா கிறைந்துவரும். அவருடைய செ யல் இயல்களில் கருமமும்தவமும் மருமமாமருவிமிளிர்கின்றன. தங்கத்தைப் பணி செப்கின்ற பொற்கொல்லர் கிலையைக் கவிஞர் ஒருவர் கருதி நோக்கினர்: அதனைத் தீயில் இட்டு உருக்கி செருக்கித் தட்டி வளைத்து அணிகள் செய்வதை வியந்து வந்தவர் இறுதியில் குன்றி மணியோடு நேரே தராசில் வைத்து நிறுத்து மதிப்பிடுவதைப் பார்த்தார்; நெஞ்சம் வருக்கினர்; அந்தோ! இந்த உயர்ந்த தங்கத்தையா.அந்த இழிந்த குன்றியோடு நேர்வைத்துச் சீர் காண்பது என்று உள்ளம் உருகினர்; பொன் போன்ற அந்த உள்ளம் உடையவர் தனது இரக்கத்தை அதன் மேல் ஏற்றி ஒருபாட்டுப் பாடினர். அக் கவி அயலே வருகிறது. பொன்புலம்பியது. சுட்டுப் பொசுக்கிச் சுளித்தடித்து நீட்டிமேல் வெட்டிய போதும் வெறுக்கிலேன்-கிட்டவைத்துக் குன்றியை நேராகக் கொண்ட பூொழுதுதான் குன்றி யுளேந்தேன் குலேந்து. தங்கம் கவித்துள்ள நிலையை இங்கனம் இது குறித்துள்ளது. நல்ல காரியங்களேச் செய்வதில் கமக்கு எவ்வளவு அல்லல் கள் நேர்ந்தாலும் மேலோர் உள்ளம் கலக்கார்; தமது ககுதி யை உணராமல் சிறுமையாய்ச் சிலர் அவமானம் செய்ய நேர்க் தால் அவர் மிகவும் மறுகி வருக்தவர் என்பது இதனால் மருமமா அறிய வந்தது. பேசாத பொன்னேயும் பேசச் செய்து உலகிற்கு உறுதி நலனைக் கவிகள் உணர்த்தி வருவது உவகையை விளைத் து வருகிறது. அறிவின் ஒளிகள் அவர் மொழிகளில் மிளிர்கின்றன. பொன்னும் தீயும் தவத்தின் மாட்சியைக் காட்சியா ஈண்டுக் காட்டியுள்ளன. துன்பத்துக்கு அஞ்சாமல் துணிந்து தவம் செப்வோரே பிறவித் துன்பங்கள் நீங்கிப் பேரின்பம் பெறுகின் ருர். தீ பொன்னைத் தாப்மை செய்வதபோல் துயர் உயிரைத் துளப்மை செய்கிறது. உயர்தவம் ஒளிசெய்து உய்தி.அருளுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/279&oldid=1327240" இலிருந்து மீள்விக்கப்பட்டது