பக்கம்:தரும தீபிகை 7.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2608 த ரும பிே ைக தாம்வரம்பு ஆகிய தலைமையர்; காமமொடு 10 கடுஞ்சினம் கடிந்த காட்சியர், இடும்பை யாவதும் அறியா இயல்பினர்; மேவரத் துனியில் காட்சி முனிவர்.' (திருமுருகு) தவம் புரிந்து வாழுகின்ற முனிவர் கிலைகளை நக்கீரர் இவ் வா.மு. செவ்வையா வரைந்து காட்டியுள்ளார். அரிய தவசியர் காட்சிகளால் பெரிய மாட்சிகள் தெரிய வருகின்றன. தவத்தைத் தழுவுகின்றவர் சிவத்தைத் தழுவுகின்ருர்; தழுவவே விழுமிய மகிமைகள் விளேகின்றன; அதிசய ஆற்றல் கள் அவரிடம் உளவாகின்றன; ஆகவே உலகம் வியந்து காணும் வியப்புகளை விளைத்தருளிவித்தக சோதிகளாய்விளங்குகின்றனர். ஒன்னர்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். (குறள், 264) தவத்தால் வரும் அதிசய விளைவுகளைத் தேவர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். தாம் கருதியபடி எல்லாம் தவசிகள் செய்ய வல்லவர் என்பது இதல்ை தெளிவாய்த் தெரிய வந்தது. ஆகாய கங்கையை இங்கே பகீரதன் கொண்டு வந்தது தவத்தால்; கிரிசங்கு மன்னனுக்கு விசுவாமித்திரர் சுவர்க்கம் தக்கது தவத்தால், படைத்தல் காத்தல் அழித்தல்களேச் செப் வேன் என்று அவர் துணிந்து கூறினர். அவருடைய தவ மகிமை யை வியந்து இந்திரன் முதலிய யாவரும் நேரே வந்து அவரைப் பணிக்க நின்றனர். அவர் ஆற்றிய அம்புதங்கள்.அளவிடலரியன. தன்னை யுடையவனத் தவம் உன்னத நிலையில் உயர்த்தி யருளும் என்பதை இவருடைய சரிகம் உணர்த்தி வருகிறது. அரிய மகிமைகள் ய ர வு ம் தவம் உடையார்க்கு உரிமையா அமைகின்றன. அவரது தலைமை அதிசய நிலைமையா கிலவுகிறது. அல்லல்களை நீக்கி நல்ல கதிகளை நல்குதலால் தவம் வேர் களுக்குத் தேவ அமுதமாய் மேவியுளது. ஆனவரையும் அதனைச் செப்து / மனிதர் மேலான நிலைகளை அடைய வேண்டும் என துரல்கள் உரைத் துவருகின்றன.அவ்வுரைகள் உவகைதருகின்றன. அசும்பு பாய்வர்ை அருந்தவம் முடித்தவர் துணைக்கண் தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்குவிண் தருவான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/299&oldid=1327260" இலிருந்து மீள்விக்கப்பட்டது