பக்கம்:தரும தீபிகை 7.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. தனிமை 2627 வேடன்: உன் வீரக்கையும் தீரத்தையும் இன்று அ ள ந் து பார்த்துவிடவேண்டும்; என்னேடு நேரே போருக்கு வாl எடு வில்லை; தொடு அம்பை, இவ்வாறு சொல்லிக் கொண்டே அந்த அதிசய வேடன் அம்பு கொடுக்கான். விசயன் மாறு கொடுத்துத் தடுத்தான். வில்லாடல் விருேடு மூண்டது. மூண்டு போராடி வருங்கால் விசயன் வில் நாண் அறுந்து போயது; போகவே வேகமாப்ப் பாய்ந்து கன் வில்லால் முடிவில்லாதவன் முடிமேல் அடித்தான்; அந்த அடி அகில சராசரங்கள் எங்கும் பட்டது. விசயன் முடியிலும் இரத்தம் ஒழுகியது; கைலே வேடன் ம ைற ங் து போனன்; வியந்து மேலே பார்த்தான். சிவபெருமான் உமா கேவியோடு விடை மேல் தோன்றி யருளினர். அந்தக் காட்சி யைக் கண்டதும் விசயன் பரவசனப் உருகி அழுதான். கண் ணிர் மார்பில் பெருகி ஓடியது; உள்ளம் உவந்து துள்ளிப் பாடினன். பாடிய அன்புமொழிகள் இன்பஒளிகளா எழுந்தன. ஆடினன், களித்தனன்; அயர்ந்து கின்றனன்; ஒடினன்; குதித்தனன்; உருகி மாழ்கினன்; பாடினன்; பதைத்தனன், பவள மேனியை நாடினன்; நடுங்கினன்; நயந்த சிங்தையான், 1, விழுந்தரு வினேயினின் மெலிந்து நாயினும் அழுந்திய பிறவியின் அயருவேன் முனம் செழுஞ்சுடர் மணிப்பணித் திங்கள் மெளலியாய் எழுந்தரு எளிய இஃது என்ன மாயமோ? 2) பையரா அணிமணிப் பவள மேனியாய்! செய்யவாய் மரகதச் செல்வி பாகனே! ஐயனே! சேவடி அடைந்த வர்க்கெலாம் மெய்யனே! எங்குமாய் விளங்கும் சோதியே! (3) (பாரதம்) பரமனைப் பார்த்தக் களித்துத் திளைத்த பார்க்கன் இவ்வாறு ப வசமாய்த் துதித்திருக்கிருன். தவம் கடவுளையும் ே ோ காட்டும்; தவசியிடம் அதிசய ஆற்றல்கள் உளவாம்; சிவபெரு மாறும் அவனை உறவுரிமையோடு உவந்து கொண்டாடுவன் அன்பதை ஈண்டு உணர்ந்து தெளிந்து வியந்து கொள்கிருேம். கணிமையாய்த் தவம் புரி, சிவமும் இனிமையாய் எதிர் வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/318&oldid=1327279" இலிருந்து மீள்விக்கப்பட்டது