பக்கம்:தரும தீபிகை 7.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி தி 2347 தீமை செய்யாதீர்! செய்தால் வெய்ய துயரங்களை அடைய கேர்வீர் என்று பெரியோர்கள் சவ்வளவு வலியுறுத்திச் சொன் லுைம் யாதும் கேளாமல் தீவினைகளைச் செய்து பின்பு துன்பங் கள் புகுந்த பொழுது அங்தோ என்று அலமந்து அழுது புலம்பு வது அவலமான பேதைகள் இயல்பாம் என இது குறித்தளது. தான் செய்த வினையின் பயனை எவனும் அனுபவித்தே தீர வேண்டும்; இது விதியின் கியதி. எங்க வகையிலும் இந்த கியதி யை யாரும் கடந்து போக முடியாது. இராகுலன் என்பவன் காந்தார நாட்டு மன்னன் மகன். நல்ல அழகன்; முன் கோபி; ஒரு நாள் அறிஞர் சிலர்க்கு விருந்து புரிந்தான்; அதில் தலைமை யான சமையல்காரன் சரியாய் வேலை செய்யவில்லை என்று சினத்து.அவனே அமைக்கான்; அவன் இறந்து போனன்; சில காளில் கொடிய பாம்பு இவனைக் கொதித்துக் கடித்தது; உடனே இவன் துடித்து மடிக்கான்; பின்பு சோழ மன்னன் மகனுப்ப் பிறந்தான். உதயகுமாரன் என்னும் பேரோடு விளங்கியிருந் தான். ஒருநாள் மாலையில் இனியசோலேயுள் புகுந்தான்; அங்கே காஞ்சனன் என்னும் விஞ்சையன் வாளால் இவன் வெட்டுண்டு மாண்டான்; பெற்றதாப் பெருந்துயருழந்து அழுதாள்; அந்த அரசியை மணிமேகலை தேற்றினுள். வினையின் விகளை வு க ளை விளக்கி அத்தேவிக்கு இத்தவமகள் தெளிவு கூறிய மொழிகள் ஞான ஒளிகளாய் ஒளிவீசி வந்தன. சில அயலே வருகின்றன. 'பூங்கொடி கல்லாய்! பொருந்தாது செய்தனே உடற்கு அழுதனேயோ உயிர்க்கு அழுதனையோ? உடற்கு அழுதனேயேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே? உயிர்க்கு அழுதனேயேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர்வரியது அவ்வுயிர்க்கு அன்பினே ஆயின் ஆய்கொடி எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் மற்று உன் மகனே மாபெருங் தேவி செற்ற கள்வன் செய்தது கேளாய்! மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனே உடல் துணி செய்தாங்கு உருத்தெழும் வல்வி ஆன நஞ்சுவிழி அரவின் நல்லுயிர் வாங்கி -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/38&oldid=1326999" இலிருந்து மீள்விக்கப்பட்டது