பக்கம்:தரும தீபிகை 7.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2694 தரும பிேகை ஆசை அறுவதே விட்டுநெறி என இது காட்டியுள்ளது. பற்று என்னும் பாசத் தளேயும், பலவழியும் பற்றருது ஒடும் அவாத்தேரும்--தெற்றெனப் பொய்த்துரை என்னும் பகையிருளும், இம்மூன்றும் வித்தற விடும் பிறப்பு. (திரிகடுகம்) பாசப்பற்று ஆகிய வித்து அற்றபோதுதான் பிறப்பு அ.றும் என்று கல்லாதனர் இங்கனம் சிறப்பாச் சொல்லியுள்ளார். ஆம்உன் இச்சையே மேலுமே லும்பிறப்பு அளிக்கும் வித்துஎன நெஞ்சே! மேறுத்திடு ஆசைக்கடல் சுவறுமே கினேவுஎனும் திரை மாயும் போமிறந்தெலாம் கினேவும் எப்பொழுதில்அப் பொழுது பூரணம் ஆய சோம சேகரத்து எங்தைபொற் கழலயும் தொழல் ஐயம் இலே நாமே. (வைராக்கியசதகம்) தம் உள்ளத்தை நோக்கிச் சாந்தலிங்க சுவாமிகள் உரையாடி யுள்ள இது ஈண்டு ஊன்றி உணர வுரியது உன் இச்சையே பிறப்புக்கு வித்து; ஆசையை அடக்கு; கசையான நினைவுகள் ஒழியின் இறைவனே எளிதே காணலாம்; அப்பொழுது பேரின்ப விடு உனக்குக் காணியாம் எனக் கம் மனத்தோடு உரைத்திருப் பது மனித இனத்துக்கெல்லாம் இனித்த உரிமையாய் இசைந்து கின்றது. ஞான போதனை ஊன மருள்களை நீக்கி உப்தி புரிகி றது. ஈன கசை ஒழிக் காலன்றி இனிய சுகம் எய்தாது. தனக்கு மோசமா நாசத்தை விளக்கின்ற ஆசையை மணி தன் விடாமல் பற்றி வருவது மாய மருளாப் முற்றி வருகிறது. புலையான நசை உள்ளத்தில் புகவே நிலையான சுகத்தை இழந்து விடுகிருன். நெறிகேடனப் இழிந்து கிலே குலைந்து உழலுகிருன். இருள்படு காட்டின் ஊடே இருந்துழல் சிதடி ராயோர் தெருள்படு நகரம் தாமே சேர்அதர் அறிகலார் போல் மருள்படு காம முன்னி வருவினே முயலா கிற்போர் பொருள்படு கலஞ்செய் வீட்டில் புகும் அதர் அறிகலாரே. பாகவதம்) இருண்ட காட்டில் அகப்பட்ட குருடன் வழி தெரியாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/385&oldid=1327348" இலிருந்து மீள்விக்கப்பட்டது