பக்கம்:தரும தீபிகை 7.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி தி 2357 புல்லர் என்றது புன்மையான நிலையிலுள்ள சிறியரை. காட்டிலுள்ள மரம் கொடி செடிகளுள் புல் மிகவும் சிறியது; அதுபோல் நாட்டிலுள்ள சிறியர் புல்லர் என நேர்ந்தார். அற்பர் கீழோர் கயவர் என இழிவா எள்ளப்படுபவர் உள்ளப் பண்பு இல்லாத புல்லரே. மனநிலை இழிக்க அளவு மனிதன் தாழ்கிருன். பொல்லாத புல்லர் நல்ல செல்வங்களே அடைவதம், கல் லோர் அவற்றை இல்லாமல் இருப்பதும் இயற்கைக்கு விசோ தம்; இந்த மாறுபட்டுக்கு மூலகாரணம் பழவினையின் விளைவே யாம். பொருள் வருதற்கு உரிய தொழிலை முன்னம் செய்து முடித்தவர் அப்பிறவியில் அதனை எளிதே அடைந்து கொள்கின் ருர்; அங்ஙனம் செய்யாதவர் அதனை எப்காமல் நிற்கின்ருர். நல்லார் நயவர் இருப்பு நயமிலாக் கல்லார்க்குஒன்று ஆகிய காரணம்-தொல்லே வினேப்பயன் அல்லது வேல்.நெடுங் கண்ணுய்! கினேப்ப வருவது.ஒன் றில். (நாலடி, 265) கல்விகளை நன்கு கற்று நல்ல குணசாலிகளாயுள்ளவர் செல்வம் இல்லாமல் வருந்துகின்ருர்; கல்லாகமூடர்கள் அதனை எளிதே பெற்றுக் களி மிகுத்திருக்கின்ருர்; இது என்னே பாரிழவு? என்று தன் மனைவி மறுகிக் கேட்டபோது ஒரு கவிஞர் அவளை நோக்கி இவ்வாறு கூறியிருக்கிருர் வினைப்பயன் என்று நினைப்பு ஊட்டியது இப்பொழுதாவது நல்ல வினைகளைச் செய்து கொள்ள வேண்டும் என உப்தி நிலையை எண்ணியே யாம். உலக வாழ்வு பலவகை விசித்திரங்களையுடையது; அறிஞர் வறிஞராய் கிற்கின்ருர், அறிவிலிகள் செல்வராய்க் திகழ்கின் முர்; மாறுபாடான இங்கிலைகளைக் கண்டதும் வேறே ஒரு விதி தனியே உளது என்று மதி தெளிகின்றது. அந்தத் தெளிவில் அரிய பல உண்மைகள் ஆராய்வோடு வெளிவருகின்றன. அறிவு உயிரின் ஒளி; தெய்வத்திரு; அதனையுடையவர் இயல் பாகவே உயர்ந்து கொள்ளுகின்றனர்; பொருளை அவர் அதிக மா மதிப்பதில்லை; ஆகவே அதனை மிகுதியும் அடையாமல் அவர் விலக நேர்ந்தனர். அந்த விலக்குவியனை இலக்குடையது. உள்ளே உணர்விலிருந்து ஊறுகின்ற கல்வியின்பத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/48&oldid=1327009" இலிருந்து மீள்விக்கப்பட்டது