பக்கம்:தரும தீபிகை 7.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2314 த ரும தீ பி. கை தக்க இன்ன தகாதன இன்ன என்று ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள மக்க ளும்விலங்கே மனுவின நெறி புக்க வேல் அவ் விலங்கும் புத்தேளிரே. நன்று இது என் றியல்த்ெரி கல்லறிவு இன்றி வாழ்வதன் ருே விலங்கின் னிடை கின்ற நனனெறி, நீ அறியாநெறி ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால் (2) (இராமாயணம்) வாலியை கோக்கி இராமன் இவ்வாறு கூறியிருக்கிருன். இக்கக் கவிகளின் சுவைகளையும், பொருள்களின் நிலைகளை யும் கருதியுணர்பவர் அரிய பல உறுதி ல ங் க ளே அறிந்த கொள்ளுவர். நல்ல விவேகியாயப் நெறி முறையே ஒழுகி வருவோ னே மனிதன் ஆகின்ருன்; அங்ங்னம் ஒழுகாகவன் பிறப்பால் மனிதன் ஆலுைம் இழிக்க மிருகமே என்பதை இங்கே கன்கு தெரிந்து நயங்களை உணர்ந்து கொள்ளுகிருேம். ஒருவனுடைய சிறந்த அறிவுக்குப் பயன் அவன் பிறந்த பிறவியின் பயனை விரைக்க அடைந்த கொள்வதேயாம். மனித தேகம் கிடைப்பது மிகவும் அரிது; அருமையான அது உரிமை யாய் அமையினும் விரைவில் அழியும் இயல்பினத; உடல் அழிந்து விழுமுன் உயிர்க்கு இனிய உறுதி கலனே உறுகின்ற வனே அரிய பெரியவன உயர்ந்து உய்தி பெறுகின்ருன். நிலையில்லாத நிலைகளை நேரே தெரிந்திருந்தும் நிலையான பேரின்ப நிலையை அடையாமல் கழிவது அவல வாழ்வாம். இளமை கழியும் பிணிமூப்பு இயையும் வளமை வலியிவை வாடும்-உளகாளால் பாடே புரியாது பால்போலும் சொல்லிய்ை விடே புரிதல் விதி. (ஏலாதி, 21) இளமை செல்வம் முதலியன கழிந்து போவதையும், முதுமை கோப் முதலியன புகுந்து கொள்வதையும் கண்ணுரக் கண்டிருக்கம் கதி காணுமல் மண்ணுய் மடிவது மதியாகாது எனக் கணிமேதையார் இவ்வாறு காட்டியிருக்கிரு.ர். துன்பத் தொடர்புகளைத் தொடாமல் நீங்கி இன்ப வீட்டுக்கு உரிய வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/5&oldid=1326965" இலிருந்து மீள்விக்கப்பட்டது