பக்கம்:தரும தீபிகை 7.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2390 த ரும தீ பிகை சத்தியவான எ வ ரு ம் விரும்புகின்றனர்; எவ்வழியும் வணங்கி யாவரும் மரியாதை செய்கின்றனர். இத்தகைய உத்தம நீர்மையை யாதம் நழுவ விடாமல் பழகி வருபவன் விழுமிய மேன்மையில் விளங்கி வியன் கதி பெறுகிருன். 907. தீதான வாசனை தீயவனச் செய்தலால் ஒதா தனவெல்லாம் ஒதினும்-ஏதும் திருந்தாமல் அன்னவன் தீவினையே செய்து வருந்தா துழல்வன் வளர்ந்து. (எ) இ-ள். தீய வாசனைகளையுடையவன் எவ்வளவு வாசித்தாலும் பாதும் திருந்தாமல் தீமைகளையே செய்து செருக்கி வளர்ந்து இழிந்து அழிந்து போகின்ருன்; அந்த அழிவுநிலையைத்தெளிக என்பதாம். உரிய மனமும் உறவான இனமும் உற்றசூழலும் பற்றிய பழக்கமும் மனிதனை உருவாக்கி வருகின்றன. சார்ந்த சார்புகள் கல்லனவாயின் அவன் நல்லவனுய் உயர்கிருன்; அல்லனவால்ை அவலமாய்த் தாழ்கிருன். உயர்வு தாழ்வுகள் இயல்பாகின்றன. முன்னைய பிறவிகளில் பழகிய பழக்கம் மூல வாசனையாப் மூண்டு வருகிறது. அது மிகவும் பலமுடைய து ஆதலால் அதன் கிலைமைகளுக்குத் தக்கபடியே மனிதன் நேர்ந்து நிற்கிருன். கெட்ட பழக்கம் சிறிது தொட்டாலும் அது உயிரை ஒட்டி எவ்வழியும் துயரையே கூட்டும். பிழையான வழியில் ஒருமுறை கழுவினல் பின்பு தெளிவாய் அவன் வெளி ஏறி வருதல் மிகவும் அரிது. பழகிய த பழமையாய் வளமை வாய்ந்து வருகிறது. எண்ண அலைகள் ஆகாயம் எங்கனும் நிறைந்திருக்கின்றன. அாய ஞானசீலர்களும் துறவிகளும் யோகிகளும் தவமுனிவர் களும் கருதிய மேலான கருத்துக்கள் மேலே அமுத வெள்ளங் களாய்ப் பரவி யாண்டும் புனித வாசனைகளை விசியுள்ளன. தீயவர்களும், புலையான நிலைகளில் பழகிய புல்லர்களும், பொல்லாத கொலைபாதகர்களும் எ ண் ணி ய எண்ணங்கள் கொடிய நச்சுவிடங்களாப் விரிந்து நெடிது ஓங்கி நிற்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/81&oldid=1327042" இலிருந்து மீள்விக்கப்பட்டது