பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வேண்டுமென்று இவர்களிடம் கேட்டு இவர்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தவில்லையே என்று மனத்திற்குள் அரைநிமிஷ நேர வருத்தம் செலுத்தி விட்டு, வந்ததற்கு ஒரு காப்பியை ஊற்றிக்கொண்டு ஓடிவந்து விடுகிறோம்-பதினைந்து காசுக்கு நம்மை எந்த நாயும் துரத்தி வரும்படியான தர்மசங்கடத்தை உண்டாக்காத புண்ணியத்தோடு!.... காற்றை வாங்கிக்கொண்டு திரும்புகிறோம்.

அதோ, பிச்சைக்காரன்!

“தர்மம் போடுங்க.தர்மம் தலைகாக்குமுங்க!” என்கிறான். அவன் தத்துவம் அப்படி நம் தலயைக் காப்பாற்றிக்கொள்ளுவதற்கு தர்மம்தான் செய்ய வேண்டுமா, வேறு மார்க்கம் இல்லையா என்று ஆராயும் தர்மசங்கடத்தையுமல்லவா அவன் நமக்கு ஏற்படுத்திக்கொடுத்துவிடுகிறான்!.... அவனும் இந்நாட்டு மன்னர்களில் ஒருவனே! நான் மட்டும் என்னை மன்னனாக எண்ணத் துணிவதில்லை. காரணம், என் வசம் ராஜமகுடம் ஏதும் இல்லாத தர்மசங்ககடமேயாகும்!

இப்போதெல்லாம் நான் தஞ்சாவூருக்கு வேலைக்குப் போய் வருவது கிடையாது. இருந்த இடத்திலேயே பணம் நூறு இருநூறு என்று வந்து, கொண்டிருக்கிறது. இந்த அதிசயத்தைக் காணும் என் ஊர்க்காரர்கள், “அட கடவுளே! நமக்கும், முதல் இல்லாத இந்தத் தொழில-இந்தக் கலையை பகவான் சொல்லித் தரவில்லையே!” என்று அங்க-