பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雳 க. சமுத்திரம் நாளு அவசர செலவுக்கு, கேஷ் பாக்ஸிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய எடுத்துட்டேன். திடீர்னு, அவர் கேஷை 'செக் பண்ண வந்தார். விஷயத்தைச் சொன்னேன். இனிமேல் அப்படிச் செய்யாதீங்க. செலவுக்கு வேணுமுன்னா என்கிட்ட வாங்கிக்கலாம். என்று சொன்னாரு. பழைய மானேஜருன்னா, வீட்டுக்கு அனுப்பியிருப்பான்.” கமதி, ஏதோ சொல்லப்போனாள்; ஒட்டுக்கேட்டு பழக்கப்பட்ட பெருமாள், வந்த வேகத்தில், ‘என் பொண்ணுக்கு வாழ்வு கொடுத்தவரே. இந்த கலியுகக்கர்ணன்தான்.பிராவிடண்ட்பண்டை நம்பி. என் மகள் கல்யாணத்த நிச்சயிச்சிட்டேன். பணம் வரல. கடைசில இவர்கிட்ட சொன்னேன். சொந்தப் பணத்தை கொடுத்து. என்னோட மானத்தை காப்பாத்துனாரு..” என்றார். கமதியால், தாளமுடியவில்லை. மானத்தைக் காப்பாத்தின அந்த மகாராஜனின் விசுவாச பிரஜைகளிடம், தன் சொல் ஏறாது என்பதை புரிந்து கொண்டவளாய், வெளியே வந்தாள். வெறி பிடித்தவள்போல், தன் வளையல்களை உடைத்தெறிந்தாள். கமதி, இரண்டு நாட்களுக்கு லீவ் போட்டாள். மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆனாலும், அலுவலகம் வரும்படியும், வேலை நிறைய இருப்பதாகவும், ஆபீஸ் நோட்' வந்தது. கமதி, போனாள். அப்பாவுக்கு மருந்து வாங்கியாக வேண்டுமே... ராமபிரானாக கருதப்படும் அவர் ஏடாகூடமாக நடந்தால் முகத்தில் அடித்தாற்போல் கேட்டுவிடுவது என்றும் தீர்மானித்தார். அலுவலகத்தில், இரண்டு மூன்று பேர் இருந்தார்கள். அவள் போனதும், மற்றவர்களை மானேஜர் அறைக்குள் கூப்பிட்டார். 'ஓ.கே. ஸார். இப்பவே எடுத்துட்டு வந்திடுறோம். என்று சொல்லிவிட்டு, அவர்கள் வேனில் புறப்பட்டார்கள். வேனின் சத்தத்திற்கு இணையாக சும்தியின் இதயம் அடித்துக் கொண்டது. மானேஜர், கூப்பிட்டால், போகப் போவதில்லை என்று உறுதியெடுத்துக்கொண்டாள். மானேஜர்,